• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அவதூறாக பேசி காலணியை கழற்றி அடிக்க முயற்சி: தேஜஸ்வி மீது லாலு மகள் பகிரங்க குற்றச்சாட்டு | rohini acharya accuses tejashwi

GenevaTimes by GenevaTimes
November 16, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
அவதூறாக பேசி காலணியை கழற்றி அடிக்க முயற்சி: தேஜஸ்வி மீது லாலு மகள் பகிரங்க குற்றச்சாட்டு | rohini acharya accuses tejashwi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாட்னா: ‘‘என்னை அவதூறாக பேசி, காலணியை கழற்றி அடிக்க முயற்சி செய்​தனர்’’ என்று லாலு மகள் ரோகிணி ஆச்​சார்யா தனது சகோ​தரர் தேஜஸ்வி மீது மறை​மு​மாக குற்​றம் சாட்டி உள்​ளார்.

பிஹார் மாநிலத்​தில் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) தலை​வர் லாலு பிர​சாத், ராப்ரி தம்​ப​தி​யருக்கு மிசா பார​தி, ரோகிணி ஆச்​சார்​யா, சாந்தாசிங், ராகிணி யாதவ், ஹேமா யாதவ், அனுஷ்கா யாதவ், தேஜ்பிர​தாப் யாதவ், ராஜலட்​சுமி சிங் யாதவ், தேஜஸ்வி யாதவ் என 9 பிள்​ளை​கள் உள்​ளனர். அனை​வருக்​கும் திரு​மண​மாகி விட்​டது. இதில் மூத்த மகள் மிசா பார​தி, 2-வது மகள் ரோகிணி ஆச்​சார்​யா, மகன்​கள் தேஜ் பிர​தாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அரசி​யலில் உள்​ளனர்.

லாலு​வின் மூத்த மகள் மிசா பாரதி கடந்த 2014-ம் ஆண்​டில் அரசி​யலில் நுழைந்​தார். லாலு​வின் 2-வது மகள் ரோகிணி ஆச்​சார்யா எம்​பிபிஎஸ் படித்​துள்​ளார். திரு​மணத்​துக்​குப் பிறகு அவர் தனது கணவர் ராவ் சமரேஸுடன் சிங்​கப்​பூரில் வசித்து வந்​தார். சிறுநீரக செயலிழப்​பால் பாதிக்​கப்​பட்ட லாலு​வுக்கு கடந்த 2022-ம் ஆண்​டில் ரோகிணி சிறுநீரகத்தை தான​மாக வழங்​கி​னார். இதைத் தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்​டில் அவர் பிஹார் அரசி​யலில் கால் பதித்​தார். அந்த ஆண்டு மக்​கள​வைத் தேர்​தலில் சரண் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு அவர் தோல்​வியை தழு​வி​னார். இதன்​பிறகு அவர் மீண்​டும் சிங்​கப்​பூருக்கு சென்​று​விட்​டார்.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை ஒட்டி அவர் மீண்​டும் பிஹாருக்கு திரும்பி வந்​தார். இதற்கு தேஜஸ்வி யாதவ் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தார். எனினும் லாலு​வின் சமரசத்​தால் ரோகிணி, பிஹார் தேர்​தலில் அதிதீ​விர​மாக பணி​யாற்​றி​னார். இந்த சூழலில் பிஹார் தேர்​தலில் ஆர்​ஜேடி படு​தோல்வி அடைந்​தது. அந்த கட்சி 143 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட நிலை​யில் 25 தொகு​தி​களில் மட்​டுமே வெற்றி பெற்​றது. தேர்​தல் தோல்வி தொடர்​பாக ரோகிணி மீது தேஜஸ்வி குற்​றம் சாட்​டிய​தாகக் கூறப்​படு​கிறது.

இதுதொடர்​பாக சமூக வலை​தளத்​தில் ரோகிணி நேற்று முன்​தினம் வெளி​யிட்ட பதி​வில், “நான் அரசி​யலில் இருந்​தும், குடும்​பத்​தில் இருந்​தும் வில​கு​கிறேன். சஞ்​சய் யாத​வும் ரமீஸும் (தேஜஸ்​வி​யின் நண்​பர்​கள்) இதைத்​தான் விரும்​பு​கின்​றனர். எல்லா பழியை​யும் நானே ஏற்​றுக் கொள்​கிறேன்” என்று தெரி​வித்​தார்.

இதைத் தொடர்ந்து ரோகிணி நேற்று வெளி​யிட்ட பதிவு​களில் கூறி​யிருப்​ப​தாவது: நேற்று (சனிக்​கிழமை) ஒரு மகள், சகோ​தரி, மனை​வி, ஒரு தாய் அவம​திக்​கப்​பட்​டாள். மிக​வும் மோச​மான வார்த்​தைகளால் திட்​டப்​பட்​டாள். (தேஜஸ்வி) காலணியை கழற்றி அடிக்​க​வும் முயற்சி செய்​தனர். ஆனால் நான் சுயமரி​யாதையை விட்​டுக் கொடுக்​க​வில்​லை. வேறு வழி​யின்றி நேற்று (சனிக்​கிழமை) கண்​ணீர்​விட்டு நின்ற பெற்​றோரை​யும் சகோ​தரி​களை​யும் விட்டு பிரிந்து வந்​தேன்.

எனது தாய் வீட்​டில் இருந்து என்னை வெளி​யேற்​றி​விட்​டனர். நான் ஆதர​வற்று நிற்​கிறேன். எனது பாதையை வேறு யாரும் தேர்வு செய்ய வேண்​டாம். எந்​தவொரு குடும்​பத்​தி​லும் ரோகிணி போன்ற பெண் பிறக்கக் கூடாது. நான் மோச​மானவள், அழுக்​கானவள் என்று குற்​றம் சாட்​டினர். எனது தந்​தைக்கு (லாலு) சிறுநீரகத்தை கொடுத்​து, கோடிக்​கணக்​கில் பணத்தை பெற்​றுக் கொண்​ட​தாக​வும் தேர்​தலில் சீட்​களை பெற்​றுக் கொண்​ட​தாக​வும் குற்​றம் சுமத்​தினர். திரு​மண​மான அனைத்து பெண்​களுக்​கும் ஓர் அறி​வுரையை கூற விரும்​பு​கிறேன். உங்​கள் வீட்​டில் அண்​ணன், தம்பி இருந்​தால் தவறு​தலாககூட உங்​கள் தந்​தையை காப்​பாற்ற முயற்சி செய்ய வேண்​டாம். தம்​பியோ, அண்​ணனோ அல்​லது அவரது ஹரி​யானா நண்​பரையோ (தேஜஸ்​வி​யின் நண்​பர் சஞ்​சய் யாதவ்) சிறுநீரகத்தை தானம் செய்ய சொல்​லுங்​கள்.

திரு​மண​மான பெண்​கள் அவர​வர் குடும்ப நலன்​களில் மட்​டுமே அக்​கறை செலுத்த வேண்​டும். உங்​கள் கணவர், பிள்​ளை​கள் மீது மட்​டும் அக்​கறை செலுத்​துங்​கள். எனது தந்​தை​யின் குடும்​பத்​துக்​காக எனது 3 பிள்​ளை​களை சரி​யாக கவனிக்​க​வில்​லை. நான் மாபெரும் தவறு செய்​து​ விட்​டேன். எனது கணவர், அவரின் உறவினர்​கள் அறி​வுரையை மீறி எனது தந்​தைக்கு சிறுநீரகத்தை தான​மாக வழங்​கினேன். எனது கணவரின் பேச்சை கேட்​க​வில்​லை. கடவுள் போன்ற எனது தந்​தையை காப்​பாற்ற சிறுநீரகத்தை தான​மாக வழங்​கினேன். அதற்கு நன்​றிக்​கட​னாக என்னை மோச​மானவள் என்று சபிக்​கின்​றனர். நான் செய்த தவறை யாரும் செய்ய வேண்​டாம்​. என்​னைப்​ போன்​ற மகளாக யாரும்​ இருக்​க வேண்​டாம்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​துள்​ளார்​.



Read More

Previous Post

மெக்சிகோவில் அரசுக்கு எதிராக தீவிரமடைந்த GenZ போராட்டம்

Next Post

ஸ்வீடனில் சோகம்: கூட்டத்தில் பேருந்து புகுந்ததில் 6 பேர் பலி | Makkal Osai

Next Post
ஸ்வீடனில் சோகம்: கூட்டத்தில் பேருந்து புகுந்ததில் 6 பேர் பலி | Makkal Osai

ஸ்வீடனில் சோகம்: கூட்டத்தில் பேருந்து புகுந்ததில் 6 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin