பிகார் மாநிலத்தில் அவசர ஊர்தியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பெண் ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடற்தகுதித் தேர்வுக்குச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பிகார் சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிகாரில் பேய்களின் ஆட்சியின்கீழ் இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து நிதிஷ்குமார் அரசாங்கம் மௌனம் காட்டுகிறது.
பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டுமென்றால், நிதிஷ்குமார் அரசின் அதிகாரத்துக்கு வெளியே வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.
மேலும், பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் கூறுகையில், கயா மாவட்டத்தில் நடந்த சம்பவமானது, சட்டம் ஒழுங்கு சரிவை பிரதிபலிக்கிறது. இது அரசின் கட்டுக்கடங்காத நடத்தையைக் காட்டுகிறது. சிறுமிக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: டீ விற்றவருக்கு டீ விற்றவர்! பிரிட்டனில் ருசிகரம்!