அவசரகால நிதி வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை நம்மில் பெரும்பாலானோர் நிச்சயமாக அனுபவித்திருப்போம். அதாவது உங்களுடைய 6 மாத அடிப்படை செலவுகளை சேமித்து அவசர காலத்திற்கு வைத்திருப்பது அவசர கால நிதியின் கட்டைவிரல் விதியாக கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் 6 மாத பணம் பெரும்பாலான நேரங்களில் போதாமல் இருக்கலாம். ஒரு சிலருக்கு பெரிய அளவில் கூட அவசரமாக தொகை தேவைப்படலாம்.
சிறிய அளவிலான அவசரகால நிதி திரட்டுவதற்கு சேமிப்பு கணக்கு மற்றும் ஃபிக்சட் டெபாசிட்கள் போதுமானது. ஆனால் அவசரமாக உங்களுக்கு பெரிய அளவிலான தொகை தேவைப்பட்டால் நீங்கள் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால் தற்போதைய இளைஞர்கள் இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று கிரெடிட் கார்டு மூலமாக தங்களுடைய அவசரகால நிதி தேவையை சமாளிக்கின்றனர்.
ஆனால் உண்மையில் இது ஒரு புத்திசாலித்தனமான யோசனையா? கிரெடிட் கார்டை உங்களுடைய முதன்மை அவசரகால நிதியாக கருத்தில் கொள்வது சரியா? இல்லவே இல்லை. கிரெடிட் கார்டுகள் உங்களுடைய அவசர கால நிதியின் மாற்றீடாக இருப்பது நல்ல யோசனை கிடையாது.
மிகச் சிறிய அளவிலான அவசரகால பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது உண்மைதான். ஆனால் உங்களுடைய கார்டின் பில் வரும்போது அதனை நீங்கள் திருப்பி செலுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஆகவே குறுகிய கால அடிப்படையில் பணத்தேவையை சமாளிப்பதற்கு மட்டுமே கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தப்படலாம்.
அதிகப்பட்சமாக கிரெடிட் கார்டுகள் நீங்கள் ட்ரான்ஸ்ஷாக்ஷன் செய்த 30 முதல் 40 நாட்களுக்கு உள்ளாக மட்டுமே வட்டி இல்லாத கால அவகாசத்தை தருகிறது. அதன் பிறகு உங்களுடைய கடனை நீங்கள் திருப்பி செலுத்த வேண்டும். ஒருவேளை அதனை உங்களால் முழுதாக திருப்பி செலுத்த முடியாமல் போனால் ஒரு வருடத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய தொகையில் 40 சதவீதம் வட்டியாக வசூலிக்கப்படும்.
இதையும் படிக்க:
EPFOல் புது மெம்பர்கள்… ஒரே மாதத்தில் 14.41 லட்சம் பேர் சேர்ப்பு… வெளியான தகவல்!
உதாரணமாக நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் 2.5 லட்சம் ரூபாய் பணத்தை அவசரகால தேவைக்கு பயன்படுத்தி விட்டதாக வைத்துக் கொள்வோம். இதற்கு நீங்கள் ஒரு வருடத்திற்கு 35 முதல் 40% வட்டி அல்லது ஒவ்வொரு மாதமும் 3 முதல் 4 சதவீத வட்டி செலுத்த வேண்டும். மொத்த தொகையையும் நீங்கள் திருப்பி செலுத்தும்வரை ரூ.2.5 லட்சம் + வட்டி விகிதம் + ஏதேனும் கூடுதல் கட்டணங்கள் ஆகியவற்றை செலுத்த வேண்டியது உங்களது பொறுப்பு.
எனவே உங்களிடம் இதுவரை எந்த ஒரு அவசரகால நிதி இல்லை என்றால் இன்று முதல் அதனை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவது புத்திசாலித்தனம். அதனை நீங்கள் ஒரே இரவில் திரட்டி விட முடியாது. அதற்கு ஒரு சில மாதங்களோ அல்லது வருடங்களோ கூட ஆகலாம். ஏதேனும் நீண்ட கால முதலீடுகளை செய்து வருகிறீர்கள் என்றால் தற்காலிகமாக அதனை நிறுத்தி வைத்து விட்டு உங்களுடைய அவசரகால நிதியை திரட்டுவதில் முதலில் கவனம் செலுத்துங்கள்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)