Last Updated:
Narendra Modi Israel visit | இந்தப் பயணத்தின்போது, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கைச் சந்திக்க உள்ளதாகவும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை தான் பெறவுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்.
தனது இஸ்ரேல் பயணத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது நண்பர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், இஸ்ரேலுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும், வலுவான நல்லுறவையும் இந்தியாவும் இஸ்ரேலும் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விவசாயம், நீர் மேலாண்மை, தொழில்நுட்பம், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்குடன் பிரதமர் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கைச் சந்திக்க உள்ளதாகவும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை தான் பெறவுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

