இந்தியாவின் (India) பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரி கம பா நிகழ்ச்சியில் ஈழத்தமிழர்கள் மற்றும் மலையத்தமிழர்களை காண்பிக்கும் விதம் பாரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
குறித்த தொலைக்காட்சி இலங்கையில் இருந்து செல்பவர்களின் கண்ணீரை வைத்து தனது TRP யை உயர்த்தி வியாபாரம் செய்வதாக சமூக வலைதளங்களில் மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
அதில் நுவரெலியா மாவட்டம் பெல்மோரல் பகுதியைச் சேர்ந்த சினேகா மற்றும் சுவிஸ் வாழ் இலங்கை தமிழர் பிரஷான் ஆகியோரின் அறிமுக காணொளிகள் அதிகளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கிறது கீழுள்ள காணொளி….
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |