• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6: சென்னையை 9-6 என வீழ்த்தியது ஜெய்ப்பூர்! | Ultimate Table Tennis Season 6 Jaipur beats Chennai

GenevaTimes by GenevaTimes
June 4, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6: சென்னையை 9-6 என வீழ்த்தியது ஜெய்ப்பூர்! | Ultimate Table Tennis Season 6 Jaipur beats Chennai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகமதாபாத்: யுடிடி சீசன் 6-ல் இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் கிரில் ஜெராசிமென்கோ (கஜகஸ்தான்), ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜாவுடன் (அமெரிக்கா) மோதினார். முதல் செட்டில் தொடக்கம் முதலே கனக் ஜா ஆதிக்கம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் அவர் 9-6 என முன்னிலை வகித்தார்.

எனினும் கிரில் ஜெராசிமென்கோ போராடி 10-10 என சமநிலைக்கு கொண்டு வந்தார். கோல்டன் புள்ளியாக அமைந்த இந்த செட்டை இறுதியில் கனக் ஜா 11-10 என கைப்பற்றினார். அடுத்த இரு செட்களும் நெருக்கமாகவே சென்றது. இந்த செட்களையும் கனக் ஜா 11-10 என தன்வசப்படுத்தினார். முடிவில் அவர் 3:0 (11-10,11-10, 11-10) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் இந்த மோதலில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி 3-0 என முன்னிலை வகித்தது.

2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் பொய்மண்டி பைஸ்யா, ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்ரீஜா அகுலாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் அனுபவம் வாய்ந்த ஸ்ரீஜா அகுலா 3:0 (11-6, 11-6, 11-9) என வெற்றி பெற்றார். இதன் மூலம் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி தனது முன்னிலையை 6-0 என அதிகரித்துக் கொண்டது.

3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் ஃபேன் சிகி (சீனா), பயாஸ் ஜெயின் ஜோடி ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஸ்ரீஜா அகுலா, கனக் ஜா ஜோடியை எதிர்கொண்டது. இதில் முதல் செட்டை ஸ்ரீஜா அகுலா, கனக் ஜா ஜோடி 11-4 என கைப்பற்றியது. 2-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீஜா அகுலா, கனக் ஜா ஜோடி 11-7 என தன்வசப்படுத்தியது. கடைசி செட்டை ஃபேன் சிகி, பயாஸ் ஜெயின் ஜோடி 11-8 என கைப்பற்றியது. முடிவில் ஸ்ரீஜா அகுலா, கனக் ஜா ஜோடி 2:1 (11-4, 11-7, 8-11) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணிக்கு எதிரான மோதலை 8-1 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியது ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி.

4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் பயாஸ் ஜெயின், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் இளம் வீரரான யஷான்ஷ் மாலிக்குடன் மோதினார். இதில் பயாஸ் ஜெயின் 3:0 (11-10, 11-5, 11-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

கடைசி மற்றும் 5-வதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் ஃபேன் சிகி, ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்டுடன் (நெதர்லாந்து) பலப்பரீட்சை நடத்தினார். இதில் ஃபேன் சிகி 2:1 (11-8, 11-6, 7-11) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 5 ஆட்டங்களின் முடிவில் இந்த மோதலில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி 9-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6-ல் நாளை (ஜூன் 4) 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 5 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி டி.டி.சி – டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் – கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேல் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சானல்களில் நேரலையாக காணலாம். மேலும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.



Read More

Previous Post

பெங்களூரு வெற்றிப் பேரணி நெரிசல் உயிரிழப்பு: ஆர்சிபி அணி இரங்கல் | RCB mourns the tragic loss of lives in Bengaluru Victory Parade

Next Post

Tamilmirror Online || ’பொருளாதாரத்தை முறையாக மாற்றியமைக்க வேண்டும்’

Next Post
Tamilmirror Online || ’பொருளாதாரத்தை முறையாக மாற்றியமைக்க வேண்டும்’

Tamilmirror Online || ’பொருளாதாரத்தை முறையாக மாற்றியமைக்க வேண்டும்’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin