• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அலுமினியப் பொருட்கள் இறக்குமதியை நிறுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல் | Manufacturers Association urges central govt to stop import of aluminum products

GenevaTimes by GenevaTimes
August 20, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
அலுமினியப் பொருட்கள் இறக்குமதியை நிறுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல் | Manufacturers Association urges central govt to stop import of aluminum products
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: உள்​நாட்டு அலுமினிய உற்​பத்தி நிறு​வனங்​களைப் பாது​காக்க, வெளி​நாடு​களில் இருந்து மலி​வான விலை​யில், தரம் குறைந்த அலுமினியப் பொருட்​கள் இறக்​கும​தியை தடுத்து நிறுத்த வேண்​டும் என்று மத்​திய அரசுக்கு, இந்திய அலுமினிய உருக்கு உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கம் வலி​யுறுத்​தி​உள்​ளது.

இது தொடர்​பாக, இந்​திய அலுமினிய உருக்கு உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கத் தலை​வர் ஜிதேந்​திர சோப்ரா சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நாம் தின​மும் 30 நிமிடங்​களுக்கு ஒரு​முறை அலுமினிய பொருளைப் பயன்​படுத்​துகிறோம். படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை, கதவு என ஒவ்​வொன்​றி​லும் அலுமினியப் பொருட்​கள் உள்​ளன.

ஸ்கூட்​டர், கார், மெட்ரோ ரயில், பேருந்​து, ராக்​கெட் வரை எல்​லா​வற்​றி​லும் அலுமினியப் பொருள் உள்​ளது. இந்​தி​யா​வின் அலுமினிய உருக்கு சந்தை சீராக விரிவடைந்து வரு​கிறது. கடந்த ஆண்டில் 8.39 பில்​லியன் டாலரில் இருந்த இந்​திய சந்தை 2035-ல் 22.5 பில்​லியன் டாலரை எட்​டும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில், சீனா, வியட்​நாம், கம்​போடி​யா, இந்​தோ​னேசி​யா​வில் இருந்து குறைந்த தரத்​தில், மலி​வான விலை​யில் அலுமினியப் பொருட்​கள் இறக்​குமதி செய்​யப்​படு​கின்​றன. நமது உள்​நாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறு​வனங்​களை பாது​காக்க, அலுமினிய இறக்​கும​தியை நிறுத்த வேண்​டும்.

இதுத​விர, மூலப் பொருட்​களின் விலை​யும் இந்​தி​யா​வில் மிக அதி​க​மாக இருக்​கிறது. இதை​யும் குறைக்க வேண்​டும். இறக்​குமதி செய்​யப்​படும் அலுமினி​யம் உட்பட இந்​தி​யப் பொருள்​களுக்கு 50 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்​துள்​ளது. தனி​நபர் அலுமினி​யம் நுகர்வு சீனா​வில் 25 முதல் 30 கிலோ​வும், அமெரிக்​கா​வில் 22 முதல் 25 கிலோ​வும் உள்​ளது.

ஆனால், இந்​தி​யா​வில் நுகர்வு குறை​வாக உள்​ளது. எனவே, உள்​நாட்டு அலுமினியப் பயன்​பாட்டை அதி​கரிக்க அரசு ஆதர​வளிக்க வேண்​டும். இதற்கு உள்​நாட்டு நிறு​வனங்​களை ஆதரிக்க வேண்​டும். இதனால் வேலை​வாய்ப்பு அதி​கரிக்​கும். நாட்​டின் மொத்த உற்​பத்தி அதி​கரிக்​கும். டெல்​லி​யில் செப். 10 முதல் 13-ம் தேதி வரை அலுமினிய உருக்கு கண்​காட்சி நடை​பெற உள்​ளது. அங்கு 200-க்​கும் மேற்​பட்ட அரங்​கு​கள் அமைக்​கப்பட உள்​ளன. இவற்றை பல்​லா​யிரக்​கணக்​கானோர் பார்​வை​யிட உள்​ளனர். இவ்​வாறு அவர் கூறி​னார்​.



Read More

Previous Post

ஆசிய கோப்பை ஹாக்கியில் பாகிஸ்தான், ஓமன் நீக்கம் | Pakistan, Oman eliminated from Asia Cup hockey

Next Post

மீண்டும் கிளம்பிய சர்ச்சை… ‘இந்தியா – பாக்., மோதலை அமெரிக்க அதிபர் நிறுத்தினார்’ – வெள்ளை மாளிகை | உலகம்

Next Post
மீண்டும் கிளம்பிய சர்ச்சை… ‘இந்தியா – பாக்., மோதலை அமெரிக்க அதிபர் நிறுத்தினார்’ – வெள்ளை மாளிகை | உலகம்

மீண்டும் கிளம்பிய சர்ச்சை... 'இந்தியா - பாக்., மோதலை அமெரிக்க அதிபர் நிறுத்தினார்' - வெள்ளை மாளிகை | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin