வரும் சனிக்கிழமை ஜூலை 13, 2024 அன்று தற்காலிகமாக UPI அமைப்புகள் வேலை செய்யாது என்பதை HDFC வங்கி அறிவித்துள்ளது. ஜூலை 13 ஆம் தேதி அன்று UPI அமைப்பில் ஒரு சில மேம்பாடுகளை செய்ய இருப்பதால் அதன் சேவைகளில் தற்காலிக தடை ஏற்படும் என்ற காரணத்தையும் வங்கி குறிப்பிட்டுள்ளது. வங்கியின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்த UPI அமைப்பு மேம்பாடு திட்டமிடப்பட்டுள்ளது.
ஜூலை 13 ஆம் தேதி அன்று UPI சேவைகள் குறிப்பிட்ட இரண்டு நேரங்களில் கிடைக்காது என்பதை HDFC வங்கி கூறியுள்ளது. அதாவது காலை 3 மணி முதல் காலை 3:45 வரை மற்றும் காலை 9:30 மணி முதல் மதியம் 12:45 வரை.
ஜூலை 13 அன்று HDFC வங்கி கஸ்டமர்களுக்கு என்னென்ன மாதிரியான சேவைகளில் தடை ஏற்படும்?
இந்த ஒட்டுமொத்த மேம்பாட்டு செயல்முறையின் போது, நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகள் பயன்படுத்துவதற்கு கிடைக்காது. கூடுதலாக IMP, NEFT, RTGS, HDFC வங்கியின் ஒரு அக்கவுண்டில் இருந்து மற்றொரு அக்கவுண்டிற்கு செய்யப்படும் ஆன்லைன் டிரான்ஸ்ஃபர்கள் மற்றும் கிளை ட்ரான்ஸ்ஃபர்கள் போன்ற அனைத்து நிதி மாற்று சேவைகளும் கிடைக்கப் பெறாது.
வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக வங்கி ஆனது அதன் கோர் பேங்கிங் சிஸ்டத்தை (CBS) புதிய பிளாட்ஃபார்முக்கு மாற்றவுள்ளது. இதன் மூலமாக வங்கி சேவைகளின் செயல்திறன் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. தேவையில்லாத குழப்பங்களை தவிர்ப்பதற்காக இந்த மேம்பாட்டை வங்கி இரண்டாவது சனிக்கிழமை, அதாவது வங்கி விடுமுறையின் போது அட்டவணைப்படுத்தியுள்ளது. மேலும் எந்த ஒரு பொருளாதாரம் சம்பந்தப்பட்ட செயல்பாட்டையும் முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு அதன் கஸ்டமர்களுக்கு வங்கி அறிவுறுத்தியுள்ளது.
குறைந்த மதிப்பிலான ட்ரான்ஸாக்ஷன்களுக்கு SMS சேவைகளை நிறுத்தும் HDFC வங்கி:
முன்னதாக 100 ரூபாய்க்கும் குறைவான UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு இனி SMS அலர்ட்டுகள் அனுப்பப்படாது என்ற தகவலை HDFC வங்கி வெளியிட்டு இருந்தது. இப்போது 100 ரூபாய்க்கும் அதிகமான தொகையை வேறொருவருக்கு அனுப்பினாலோ அல்லது பேமெண்டாக செலுத்தினாலோ மற்றும் 500 ரூபாய்க்கும் அதிகமான பணத்தை பெரும்போது மட்டுமே SMS நோட்டிஃபிகேஷன்கள் அனுப்பப்படும். எனினும் அனைத்து UPI ட்ரான்ஸாக்ஷன்கள் சம்பந்தமான தகவல்களை இமெயில் மூலமாக தொடர்ந்து அனுப்பும் என்பதையும் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
HDFC வங்கியின் கிரெடிட் கார்டு விதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்:
CRED, Paytm, Cheq, MobiKwik மற்றும் Freecharge போன்ற பிளாட்ஃபார்ம்கள் மூலமாக செய்யப்படும் கிரெடிட் கார்டு வாடகை பேமெண்ட்களுக்கு புதிய கட்டணங்களை HDFC வங்கி அறிவித்துள்ளது. இது வாடகை ட்ரான்ஸாக்ஷன்களுக்கு 1% கட்டணத்தை கஸ்டமர்களிடமிருந்து HDFC வங்கி வசூலிக்க உள்ளது. மேலும் ஒரு ட்ரான்ஷாக்ஷனில் அதிகபட்சமாக 3000 ரூபாய் மட்டுமே பேமெண்ட் செலுத்த முடியும். இந்த விதி வருகிற ஆகஸ்ட் 1 2024 முதல் அமலாகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)