• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறாரா தோனி..? 6 மாதங்கள் வரை ஓய்வு.. வெளியான தகவல்!

GenevaTimes by GenevaTimes
May 21, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறாரா தோனி..? 6 மாதங்கள் வரை ஓய்வு.. வெளியான தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அறுவை சிகிச்சைக்காக கிரிக்கெட் வீரர் தோனி வெளிநாடு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சிகிச்சை முடிந்த பின்னர் சுமார் 6 மாதங்கள் வரை அவர் ஓய்வில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தர வரிசையில் ஐந்தாம் இடத்தை பிடித்தது. எளிதாக அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் வெறும் 10 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை சென்னை அணி இழந்தது.

விளம்பரம்

இந்த தொடரில் சென்னையின் வெற்றிக்கு முன்னாள் கேப்டன் தோனி மிக முக்கிய பங்கு வகித்தார், பேட்டிங்கில் சில பந்துகள் மட்டுமே அவர் எதிர்கொண்டாலும்இ அவற்றை சிக்சரும் பௌண்டரியமாக மாற்றி அணியின் நெட் ரன்ரேட் உயர்வதற்கு காரணமாக இருந்தார். ஃபில்டிங்கின்போது மிக துல்லியமான இடங்களில் வீரர்களை நிறுத்தி, எதிரணிக்கு தோனி கடும் நெருக்கடி கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் கேப்டன் ருதுராஜா அல்லது தோனியா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. ஃபில்டிங் செய்யும் போது வீரர்கள் பலரும் தோனியின் உத்தரவுக்காக அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க – தோனி ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி..! சிஎஸ்கே அதிகாரி சொன்ன சூப்பர் தகவல்..

இதற்கிடையே தோனியின் காலில் லேசான காயம் ஏற்பட்டிருந்தது. இருப்பினும் இதனால் அவர் விளையாடுவதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சென்னை அணி நிர்வாகம் விளக்கம் அளித்து இருந்தது. இருப்பினும் தோனி களத்தில் ஓடுவதை பெரும்பாலும் தவிர்த்து வந்தார். இதனாலேயே அவர் கடைசி சில ஓவர்களில் களம் இறக்கப்பட்டார். முன்கூட்டியே அவர் களமிறங்கினால் அதிக காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அவர் கடைசி ஓவர்களில் விளையாடுவதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்திருந்தார்.

விளம்பரம்

இந்த நிலையில் காலில் அறுவை சிகிச்சைக்காக தோனி லண்டன் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன் பின்னர் சுமார் 6 மாதங்கள் அவர் ஓய்வில் இருப்பார் என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தான் அவர் எதிர்கால திட்டங்கள் குறித்து முடிவு எடுக்கக் கூடும் என்று கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதற்கிடையே தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடுவார் என்ற தகவல் இணையத்தில் அதிகம் பரவியுள்ளது. அதேபோன்று ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்பியுள்ள தோனி, அங்கு தனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கான பைக் ரைடிங்கில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.

விளம்பரம்

.

Read More

Previous Post

ஹைதராபாத்தில் கார் பதிவெண்ணுக்கு ரூ.25 லட்சம்!

Next Post

மானாவாரிக்கு கைகொடுக்காத கோடை மழை – விவசாயிகள் ஏமாற்றம் | Summer Rains Not Giving way to Rainfall – Farmers Disappointed

Next Post
மானாவாரிக்கு கைகொடுக்காத கோடை மழை – விவசாயிகள் ஏமாற்றம் | Summer Rains Not Giving way to Rainfall – Farmers Disappointed

மானாவாரிக்கு கைகொடுக்காத கோடை மழை - விவசாயிகள் ஏமாற்றம் | Summer Rains Not Giving way to Rainfall - Farmers Disappointed

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin