அதிமுக ஐடி விங்க் எதிர்வினை
அதற்கு பதிலடி தரும் வகையில் அதிமுக ஐடி விங் சார்பில், ஆர்.எஸ்.பாரதிக்கு, அவரது மொழியிலேயே பதிலடி அளித்திருக்கிறது. அவர்களின் எக்ஸ் தள பதிவில், அறிவாலய “கேட்-கீப்பர்” அறிக்கை விடுவதற்கு முன், முரசொலி தவிர மற்ற பேப்பர்களையும் படிக்கவும்’ என்று அந்த பதிவில் குறிப்பிட்டு, திமுக தலைமையகமான அறிவாலயத்தின் வெளியே, ஆர்.எஸ்.பாரதி முரசொலி படிப்பதைப் போன்ற கார்ட்டூன் உருவாக்கி, அதையும் பதிவு செய்துள்ளனர்.

