கலக்கலாக பவுலிங் செய்த மும்பை இந்தியன்ஸ் பவுலர்களில் அறிமுக வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தீபக் சஹார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ட்ரெண்ட் போல்ட், ஹர்திக் பாண்டியா, விக்னேஷ் புதூர், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். மும்பை பவுலர்களில் பவுலிங் செய்த அனைத்து பவுலர்களும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். அத்துடன் இந்த சீசனில் மிகவும் குறைந்தபட்ச ஸ்கோரை மும்பை இந்தியன்ஸ் பதிவு செய்துள்ளது.

