• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்..! யார் இந்த அஷ்வினி குமார்?

GenevaTimes by GenevaTimes
March 31, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்..! யார் இந்த அஷ்வினி குமார்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 31, 2025 10:50 PM IST

மும்பை இந்தியன்ஸ் வீரர் அஸ்வனி குமார் ஐபிஎல் அறிமுகப் போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அஸ்வனி குமார்அஸ்வனி குமார்
அஸ்வனி குமார்

ஐபிஎல் தொடரில் அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வீரர் அஸ்வனி குமார் அசத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் செய்ய முடிவெடுத்ததால், முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கிய கொல்கத்தா அணியில், அதிகபட்சமாக அங்க்கிரிஷ் ரகுவன்ஷி மட்டும் 26 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்த இன்னிங்சின்போது, 4ஆவது ஓவரை வீசினார் அஸ்வனி குமார். கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானேவின் விக்கெட்டை தனது ஐபிஎல் அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே வீழ்த்தி கவனத்தை ஈர்த்தார். அதுமட்டுமின்றி, ரிங்கு சிங், மணீஷ் பாண்டே, ஆண்ட்ரே ரஸல் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி மலைக்க வைத்தார் அஸ்வனி குமார். ஐபிஎல் தொடர்களில், அறிமுகமான போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார் அஸ்வனி குமார்.

இந்த போட்டியில் 3 ஓவர்கள் மட்டுமே வீசிய அஸ்வனி குமார், 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16.2 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

யார் இந்த அஸ்வனி குமார்?:

23 வயதான அஸ்வனி குமார் மொகாலியை சேர்ந்தவர். உள்ளூர் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 2 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளையும், 4 லிஸ்ட் ஏ கிரிக்கெட்டையும் விளையாடியுள்ளார்.

இதையும் படிக்க: “தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக வேண்டும்…” – முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்

அவர் இறுதி ஓவர்களை நன்றாக வீசக்கூடியவர் என பெயர் பெற்றவர். கடந்த 2025 மெகா ஏலத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 30 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

First Published :

March 31, 2025 10:50 PM IST

Read More

Previous Post

“கல்வி முறையை இந்திய மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை சோனியா ஆதரிக்க வேண்டும்” – ஃபட்னாவிஸ் | Education system is being Indianised: Maha CM Fadnavis says Sonia Gandhi should support NEP

Next Post

உடல்பேறு குறைந்த சிறுவனுடன் கடத்தி செல்லப்பட்ட கார்; பல மணி நேரம் சென்று கண்டுபிடிப்பு | Makkal Osai

Next Post
உடல்பேறு குறைந்த சிறுவனுடன் கடத்தி செல்லப்பட்ட கார்; பல மணி நேரம் சென்று கண்டுபிடிப்பு | Makkal Osai

உடல்பேறு குறைந்த சிறுவனுடன் கடத்தி செல்லப்பட்ட கார்; பல மணி நேரம் சென்று கண்டுபிடிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin