அதே போல,டெல்லியில் அண்ணாவிற்கு அதிமுக எம்பிக்கள் புகழ் மரியாதை செய்தனர். அறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் அதிமுக எம்பிக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். டெல்லியில் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை எம்.பி. தலைமையில் எம்.பி.க்கள் இன்பதுரை, தனபால் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து,மலர்தூவி மரியாதை செலுத்தினர்.