இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இரத்தினபுரி மாவட்ட அறநெறிப்பாடசாலை ஒன்றியமும் இணைந்து நடாத்தும் “பஞ்சபுராணம் முற்றோதல்” போட்டியானது இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 15 அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு இடையில் பிரிவுகளின் அடிப்படையில் நடைபெறவுள்ளது.

இ/எம்பி/பரியோவான் ஆரம்பப்பிரிவு பாடசாலையில் 14ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு, பாலர்ப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேல் பிரிவு என்ற அடிப்படையில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதற்கான பூரண அனுசரணையை Vijay Electrical உரிமையாளர் அர்ஜூணன் விஜயகுமார் வழங்குகின்றார்.
ஒரு பிரிவில் இருந்து 5 மாணவர்கள் அடங்களாக 4 பிரிவுகளில் இருந்தும் ஒரு அறநெறிப்பாடசாலையில் 20 மாணவர்கள் போட்டிகளில் பங்குபெறுகின்றார்கள். மொத்தமாக 300 மாணவர்கள் இப்போட்டிகளில் பங்குபெற்ற உள்ளார்கள்.
பிரிவுகளின் அடிப்படையில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
முதல் பரிசு – 10,000 ரூபாய்.
இரண்டாம் பரிசு – 7,000 ரூபாய்.
மூன்றாம் பரிசு – 5,000 ரூபாய்.
மேலும் மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.