யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுன காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.
இவ்வாறு கொழும்பு கோட்டை காவல்நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று காவல்துறையில் சரணடைந்துள்ளார்.
கடமையில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியமைக்காக நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
விசாரணை
இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் இசுறு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்டது.
எனினும் வழக்கு விசாரணையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.
இதனையடுத்து நீதவான் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்

