அர்ச்சுனாவை வெளியேறச் சொல்வதற்கு அமைச்சருக்கோ அல்லது வேறு
எவருக்குமோ அதிகாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்
ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்
ஏற்பட்ட பிரச்சினை குறித்து அவரை தொடர்புகொண்டு வினவியபோது கருத்து
தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவர் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகளும் சரியான வகையில் பதில் கூற வேண்டும்.
தலைமைத்துவம் இல்லாமல் போய்விடும்
அவ்வாறு அதிகாரிகள் பதில் கூறும் பொழுது அதற்கு அந்த மக்கள் பிரதிநிதியும்
கட்டுப்பட வேண்டும். ஒரு வாரத்தில் விசாரணை செய்கிறோம், அல்லது ஒரு விசாரணை
குழு அமைக்கிறோம் என்று அதிகாரிகள் கூறும்போது அவர் அதனை ஏற்றுக்கொள்ள
வேண்டும்.

அதேவேளை கூட்டத்தை தலைமை தாங்கும் தலைவரும் அந்த கூட்டத்தை
கட்டுப்படுத்தக்கூடிய வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு
கட்டுப்படுத்தாவிட்டால் அங்கு தலைமைத்துவம் இல்லாமல் போய்விடும்.
நேற்றைய கூட்டத்திற்குள் கமக்கார அமைப்பினர் என்று கூறிக்கொண்டு சிலர் உள்ளே
வந்து வட்டனர். அவர்கள் சிறீதரன் எம்.பியின் ஆட்கள். அவர் கடந்த காலங்களில்
இடையிடையே கூட்டத்தை விட்டுவிட்டு எழும்பி சென்று விடுவார், அதன்போது அவரது
ஆட்களும் எழும்பி சென்று விடுவார்கள்.
அது பிழை.
வடக்க மாகாணத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் தமது நேரத்தினை ஒதுக்கி நேற்றைய
கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். அதற்காக எரிபொருள் செலவு என பல செலவுகள்
உள்ளன. இந்நிலையில் கூட்டம் நிறுத்தப்பட்டது தவறு.
கூட்டத்தை குழப்பலாம் என்ற சிந்தனை
சிறீதரனோ அர்ச்சுனாவோ
வெளியே போனாலும் கூட்டம் முழுமையாக நடத்தப்பட்டு இருக்க வேண்டும். இவ்வாறு
தொடர்ச்சியாக கூட்டத்தை நிறுத்தி நிறுத்தி பழகினால் அது கூட்டத்தை குழப்பலாம்
என்ற சிந்தனை வந்துவிடும்.
அதற்கு இடமளிக்க கூடாது.
ஒரு விடயத்தை கூட்டத்தில் பேசும்போது அதனை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்
தலைவரோ அல்லது மாவட்ட செயலாளரோ அல்லது பிரதேச செயலர் ஊடாகவோ நிகழ்ச்சி
நிரலுக்குள் கொண்டுவரந்து அதனை பேச வேண்டும்.

ஒரு அதிகாரி தவறு செய்தால் அதனை
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விசாரணை செய்ய முடியாது. அதற்காக
முறைப்பாடு பதிவு செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் உள்ளது, பொலிசார்
உள்ளார்கள், வேறு வேறு இடங்கள் உள்ளன.
அந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும்
விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் குற்றவாளியா இல்லையா என்று கூற முடியும் அதை
விட்டு ஒரு பொது வெளியில் குற்றவாளி என்று யாரையும் குற்றம் சாட்ட முடியாது.
அரசாங்க அதிகாரிகளை விரக்திக்கு உள்ளாக்க கூடாது.
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு
குழு தலைவர் இருக்கும்போது அவரை மீறி அருச்சுனா பேசியிருக்கக் கூடாது. அவரது
கருத்துக்கு அருச்சுனா கட்டுப்பட வேண்டும். அதனை கட்டுப்படுத்த ஒரு பொறிமுறை
வேண்டும். அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தொடர்ச்சியாக
அருச்சுனா குழப்புவதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று நாங்கள் கூடி பேசி ஒரு
முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

