• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அர்ச்சுனாவின் எம்.பி பதவி விவகாரம்: இன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அர்ச்சுனாவின் எம்.பி பதவி விவகாரம்: இன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவி தொடர்பான வழக்கு 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி வரை  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ‘குவோ வாரண்டோ’ மனு திங்கட்கிழமை (அக்டோபர் 12) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  

ஆனால் வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழாம் முறையாக அமைக்கப்படாததால் வாதங்களைத் தொடர முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வழக்கு விசாரணை

இதன்போது அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கெளசல்யா நரேந்திரன், தனது கட்சிக்காரர் புதிய சட்டத்தரணிகளை நியமிக்க உத்தேசித்துள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

அர்ச்சுனாவின் எம்.பி பதவி விவகாரம்: இன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Mp Archchuna Gets More Time In Parliament As Legal

இதன்படி, நீதிபதிகள் மாயாதுன்னே கோரியா மற்றும் மஹேன் கோபல்லாவ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில், வழக்கு விசாரணையை டிசெம்பர் 16 ஆம் திகதிக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

2024 பொதுத் தேர்தலுக்கான தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தபோது அர்ச்சுனா ஒரு அரசாங்க மருத்துவ அதிகாரியாகவே இருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் பணியாற்றுவதற்கான அவரது தகுதியை எதிர்த்து ஒஷாலா ஹெரத் என்பவரால் குவோ வாரண்டோ மனு தாக்கல் செய்யப்பட்டது.

இருப்பினும், தான் சம்பளமின்றி இடைநிறுத்தப்பட்டிருந்ததால் தகுதியிழப்பு விதியின் கீழ் அரச அதிகாரியாகக் கருதப்பட முடியாது என அர்ச்சுனாவின் தரப்பு முன்னதாக சுட்டிக்காட்டியிருந்தது.

தனது தகுதிக்கு எதிராகத் தொடரும் சட்டரீதியான சவாலைக் குறிப்பிடும் வகையில், அர்ச்சுனா பலமுறை நாடாளுமன்றத்தில், தான் நீண்ட காலம் உறுப்பினராக நீடிக்க மாட்டேன் என்பது போன்ற கருத்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

DECODE | நோபல் பரிசு பெறும் முதல் தமிழ்ப் பெண்… யார் இந்த நவநீதம் பிள்ளை?

Next Post

பிரீமியம் பெற அசுர வேகம்.. பணம் கேட்டால் விபூதி அடிக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்.. வருகிறது கடிவாளம் | Insurance Regulatory and Development Authority cracks down on insurance companies that delay claims

Next Post
பிரீமியம் பெற அசுர வேகம்.. பணம் கேட்டால் விபூதி அடிக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்.. வருகிறது கடிவாளம் | Insurance Regulatory and Development Authority cracks down on insurance companies that delay claims

பிரீமியம் பெற அசுர வேகம்.. பணம் கேட்டால் விபூதி அடிக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்.. வருகிறது கடிவாளம் | Insurance Regulatory and Development Authority cracks down on insurance companies that delay claims

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin