அப்போது, திடீரென தனது அம்மா அனிதா கதவை திறந்ததும், காசி என்ற நபர் மற்றும் மேலும் நான்கு பேர் தங்களது பேட் ரூமுக்குள் வந்ததாக தெரிவித்துள்ளார். அவர்களை கண்டதும் அச்சத்தில் தூங்குவது போன்று நடித்ததாக அந்த சிறுவன் கூறியுள்ளார். பின்னர், தனது அம்மாவின் கண் முன்னே, தந்தையை காலை பிடித்துக் கொண்டு அந்த கும்பல் தாக்கியதாக தெரிவித்துள்ளார். உடனே, தனது தந்தை அருகே சென்றதும், காசி தன்னை தூக்கி மிரட்டியதாக சிறுவன் கண்ணீர் சிந்தியுள்ளார்.


