டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், கேப்டன் ரஷீத் கானை வீடியோ காலில் அழைத்து தாலிபான் அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், வங்கதேச அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
ஆப்கானிஸ்தான் அரையிறுதிப் போட்டிக்கு சென்றதை அந்நாட்டு மக்களும், ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிக்க:
இந்தியா – இங்கிலாந்து அரையிறுதி ரத்தானால் என்ன நடக்கும்? யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள்?
இந்த நிலையில், தாலிபான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் (Amir Khan Muttaqi), ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கானுக்கு வீடியோ கால் செய்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை ஆப்கானிஸ்தான் எதிர்கொள்கிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)