• Login
Friday, July 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அரைசதம் அடித்த பின் ‘A’ சிக்னல் காட்டியது ஏன்? வைபவ் சூர்யவன்ஷியின் நெகிழ்ச்சி விளக்கம்! | Vaibhav Sooryavanshi: What is the reason behind Vaibhav Sooryavanshi showing A symbol after Scored 18 ball fifty against Zimbabwe

GenevaTimes by GenevaTimes
July 24, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
அரைசதம் அடித்த பின் ‘A’ சிக்னல் காட்டியது ஏன்? வைபவ் சூர்யவன்ஷியின் நெகிழ்ச்சி விளக்கம்! | Vaibhav Sooryavanshi: What is the reason behind Vaibhav Sooryavanshi showing A symbol after Scored 18 ball fifty against Zimbabwe
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Friday, July 24, 2026, 14:55 [IST]

ஹராரே: இளம் வயதிலேயே சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடிக்க முடிந்தாலும், எந்த சூழலிலும் அலட்சியம் காட்ட மாட்டேன் என்று இந்திய நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அரைசதம் எதிர்கால போட்டிகளுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளதாக கூறிய வைபவ் சூர்யவன்ஷி, தனது செல்ஃபிரேஷனுக்கான விளக்கத்தையும் அளித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 18 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்தார்.

Vaibhav Sooryavanshi

இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை வைபவ் சூர்யவன்ஷி 15 வயதிலேயே விளாசி இருக்கிறார். இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டம் தொடங்கிவிட்டதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த போட்டிக்கு பின் வைபவ் சூர்யவன்ஷி பேசுகையில், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் கட்டத்திலேயே இப்படியொரு இன்னிங்ஸை ஆடி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஆட்டம் என்னுடைய அடுத்த இன்னிங்ஸிற்கான நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது. இந்தப் போட்டியிலும் என்னுடைய ஸ்டைலில் தான் ஆடினேன். சில மைதானங்களில் நம்மால் எளிதாக ரன்கள் சேர்க்க முடியும்.

அதற்காக அலட்சியம் காட்ட மாட்டேன். எந்த பிட்ச், மைதானமாக இருந்தாலும் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவ முயற்சிப்பேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து அரைசதம் அடித்த பின் A என்ற சிம்பிளை ஏன் காட்டினீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வைபவ் சூர்யவன்ஷி, என்னுடைய அம்மா பெயர் ஆர்த்தி.

அதனால் A என்று சிக்னல் காட்டினேன். என்னுடைய முதல் அரைசதத்தை அம்மாவுக்கு மட்டுமல்லாமல் தந்தை, பயிற்சியாளர்கள், குடும்பத்தினர் என்று அனைவருக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அணுகுமுறை ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary

Vaibhav Sooryavanshi: What is the reason behind Vaibhav Sooryavanshi showing A symbol after Scored 18 ball fifty against Zimbabwe

Read More

Previous Post

நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அர்ச்சுனா எம்.பியை கைதுசெய்ய பிடியாணை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு  – Sri Lanka Tamil News

Next Post

Team India | கண் இமைக்கும் நேரத்தில் எதிரணிக்கு ‘செக் மேட்’… மீண்டும் அதே மேஜிக் – 3 முறை சாதித்த ஒரே இந்தியர் யார்?

Next Post
Team India | கண் இமைக்கும் நேரத்தில் எதிரணிக்கு ‘செக் மேட்’… மீண்டும் அதே மேஜிக் – 3 முறை சாதித்த ஒரே இந்தியர் யார்?

Team India | கண் இமைக்கும் நேரத்தில் எதிரணிக்கு ‘செக் மேட்’... மீண்டும் அதே மேஜிக் - 3 முறை சாதித்த ஒரே இந்தியர் யார்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin