Last Updated:
வட மாநிலங்களில் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில், பல கட்டடங்கள் தரைமட்டமாகின. இதற்கிடையில் அருணாச்சலப் பிரதேசத்தின் டிராங் மற்றும் தவாங்யில் உள்ள பத்மா ஹோட்டல் அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் சுமார் 120 மீட்டர் தூரம் போக்குவரத்து தடைபட்டதை அடுத்து வாகன போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு காமெங் மாவட்டத்தின் சப்பர் கேம்ப் அருகே உள்ள டிராங் மற்றும் தவாங் இடையேயான சாலையில் ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் மீது பெரிய பாறைகள் விழுந்தன. இதனால் பல வாகனங்கள் சேதமடைந்தன.
வட மாநிலங்களில் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில், பல கட்டடங்கள் தரைமட்டமாகின. இதற்கிடையில் அருணாச்சலப் பிரதேசத்தின் டிராங் மற்றும் தவாங்யில் உள்ள பத்மா ஹோட்டல் அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் சுமார் 120 மீட்டர் தூரம் போக்குவரத்து தடைபட்டதை அடுத்து வாகன போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மலையிலிருந்து பாறைகள் விழுவதைக் கவனித்த சிலர் தங்கள் கார்களில் இருந்து கீழே இறங்கி, மேலே இருந்து கீழே விழுவதைக் கண்டனர்.
வைரலாகும் வீடியோவில், மலைகளில் இருந்து பாறைகள் உருண்டு கீழே விழுவதும், மக்கள் பாதுகாப்புக்காக அங்கும் இங்கும் ஓடுவதும், இதன் காரணமாக பெரும் குழப்பம் நிலவுவதும் தெரியவந்தது. இதனைப் பார்த்தவர்களில் ஒருவர், ஏதோ வருகிறது என்று கத்தினார். மற்றொருவர், உங்க காரை ரிவர்ஸ் எடுங்க. தம்பி, உங்க காரை ரிவர்ஸ் எடுங்க. சீக்கிரம் எடுங்க என்று கத்துவதையும் கேட்கலாம். இன்னொருவர் இன்னும் வருகிறது, விலகிச் செல்லுங்கள் என்று கூறுவதைக் கேட்கலாம். இன்னொரு நபர், வா, சீக்கிரம் வா! என்று கத்துவதைக் காணலாம். சில வாகனங்கள் மீது பாறைகள் மற்றும் சேறு விழுவதையும் காணலாம்.
இதற்கிடையில், நிலச்சரிவுகளால் சாலை சேதமடைந்தது. எனவே, தற்போது மறுசீரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும், புதன்கிழமை முதல் வாகனங்கள் இந்தப் பாதையை பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த வீடியோவில், வாகனங்கள் நகராமல் இருப்பதால் மக்கள் ஹாரன் அடித்துக் கொண்டிருந்தனர். தங்கள் கார்களை வேகமாக ரிவர்ஸ் எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். பாறைகள் தொடர்ந்து விழுந்து கொண்டிருந்தன, இதனால் சிலர் தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கி ஓடினர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் குறைந்தபட்சம், இரண்டு வாகனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
August 27, 2025 6:46 PM IST


