Last Updated:
இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கூடைப்பந்தாட்ட கம்பங்களின் தரம் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன
அரியானாவில், ரோத்தக் மற்றும் பகதூர்கர்ஹ் ஆகிய இடங்களில் கூடைப்பந்தாட்டப் பயிற்சி மைதானங்களில் கூடைப்பந்தாட்டக் கம்பம் விழுந்ததில் இரண்டு இளம் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ரோத்தக் மாவட்டம் லக்கன் மஜ்ரா கிராமத்தில், ஹர்திக் ரதி என்ற 16 வயது தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட வீரர் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, கூடைப்பந்தாட்டக் கம்பம் அவர் மீது விழுந்ததில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமையான நேற்று நடந்தது.
இதற்கு 2 நாட்களுக்கு முன்பாக பகதூர்கர்ஹில் உள்ள ஹோஷியார் சிங் மைதானத்தில், அமன் என்ற 15 வயது வீரர் இதேபோல் கூடைப்பந்தாட்டக் கம்பம் விழுந்ததில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மாவட்ட விளையாட்டு அலுவலரை சஸ்பெண்ட் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
November 26, 2025 5:31 PM IST
அரியானாவில் கூடைப்பந்து கம்பம் விழுந்து 2 வீரர்கள் உயிரிழப்பு.. மாவட்ட விளையாட்டு அதிகாரி சஸ்பெண்ட்


