• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அரிசி விலை தொடர்பில் வெளியான வர்த்தமானி : எழுந்துள்ள சர்ச்சை

GenevaTimes by GenevaTimes
December 11, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
அரிசி விலை தொடர்பில் வெளியான வர்த்தமானி : எழுந்துள்ள சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரிசி விலை தொடர்பான வெளியான புதிய வர்த்தமானி அறிவித்தல் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே வெளியிடப்பட்டுள்ளதாகத் தேசிய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட நுகர்வோர் அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.



எனினும், கட்டுப்பாட்டு விலையை மீறும் அரிசி விற்பனையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.



அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்கள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அரிசி இறக்குமதி



நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பச்சையரிசி கிலோ கிராமொன்றுக்கு 210 ரூபாவும், நாட்டரிசிக்கு 220 ரூபாவும் சம்பா அரிசிக்கு 230 ரூபாவும் அதிகூடிய சில்லறை விலையாக நிர்ணயித்து வர்த்தமானி வெளியாகியுள்ளது.

அரிசி விலை தொடர்பில் வெளியான வர்த்தமானி : எழுந்துள்ள சர்ச்சை | Rice Shortage And Price Increased In Sl Gazette



அத்துடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நாட்டரிசி கிலோ கிராமொன்றுக்கு 230 ரூபாவும், பச்சையரிசி கிலோ கிராமொன்றுக்கு 220 ரூபாவும், சம்பா அரிசி கிலோ கிராமொன்றுக்கு 240 ரூபாவும், கீரிசம்பா கிலோ கிராமொன்றுக்கு 260 ரூபாவும் அதிகூடிய சில்லறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



மேலும், நாட்டரிசி கிலோகிரா மொன்றுக்கு 225 ரூபாவும், பச்சையரிசி கிலோ கிராமொன்றுக்கு 215 ரூபாவும், சம்பா அரிசி கிலோ கிராமொன்றுக்கு 235 ரூபாவும், கீரிசம்பா கிலோ கிராமொன்றுக்கு 255 ரூபாவும் மொத்த விற்பனை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல்



எவ்வாறாயினும், குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த விற்பனை விலையானது மொத்த வர்த்தகர்களுக்கும், ஆலை உரிமையாளர்களும் உரித்தானதாகும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா (Mudith Perera) தெரிவித்துள்ளார்.

அரிசி விலை தொடர்பில் வெளியான வர்த்தமானி : எழுந்துள்ள சர்ச்சை | Rice Shortage And Price Increased In Sl Gazette



எனவே, ஆலைகளிலிருந்து பெறப்படும் விலைக்கே மொத்த விற்பனையாளர்களும் அரிசியை விற்பனை செய்ய வேண்டியுள்ளது.

இதனால் அரிசி விற்பனையாளர்கள் விற்பனை செயற்பாடுகளிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்படும்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து, அரிசி உற்பத்தியாளர்களுக்கு மாத்திரம் மொத்த விற்பனை விலை செல்லுபடியாகும் வகையில் வர்த்தமானியொன்றை வெளியிட வேண்டும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

வயதான சீன சுற்றுலா பயணி காணாமல் போனதாக புகார் | Makkal Osai

Next Post

Rain Warning: ’சென்னை முதல் நாகை வரை! 14 மாவட்டங்களில் 1 மணி வரை மழை’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Next Post
Rain Warning: ’சென்னை முதல் நாகை வரை! 14 மாவட்டங்களில் 1 மணி வரை மழை’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Rain Warning: ’சென்னை முதல் நாகை வரை! 14 மாவட்டங்களில் 1 மணி வரை மழை’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin