ஈரான் மீதான போருக்கான செலவை அரபு நாடுகள் ஏற்க வேண்டும் என்று கோருவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக விபரங்கள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் “இது அவருக்குள்ள ஒரு யோசனை என்பதை நான் அறிவேன்.
இது குறித்து அவரிடமிருந்து நீங்கள் விரைவில் மேலதிக விபரங்களைக் கேட்பீர்கள் என்று நான் நினைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரபு நாடுகள் இந்தப் போர்ச் செலவில் பங்களிக்குமா என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அரபு நாடுகளை இதைச் செய்யச் சொல்வதில் ட்ரம்ப் மிகுந்த ஆர்வம் காட்டுவார் என்று நான் கருதுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

