நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்து ‘காஞ்சனா4’ படத்தை எடுக்க இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு இந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு பூஸ்ட்டாக அமைய, இந்த ஹாரர் படங்களின் வரிசையில் ‘காஞ்சனா’ படத்தின் நான்காவது பாகத்தையும் தூசி தட்டி எடுக்க இருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ‘காஞ்சனா4’ படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தொடங்க இருக்கிறது. படத்தை எழுதி, இயக்கி, அவரின் ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. நடிகர்கள் மற்றும் மற்ற தொழில்நுட்பக் குழுவினர்கள் குறித்தான விவரம் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
The post ’அரண்மனை4’ கொடுத்த பிரம்மாண்ட வெற்றி.;காஞ்சனா4’ம் ரெடி! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

