கட்சியின் தேர்தல் பலத்தையும், ஜனதா தள எம்எல்ஏக்களையும் பயன்படுத்தி யதுவீருக்கு குறைந்தபட்சம் 1 லட்சம் வாக்குகள் அதிகம் கிடைக்கும் என்று பாஜக நம்புகிறது, அதே நேரத்தில் காங்கிரஸ் தனது பாரம்பரிய வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொண்டு லக்ஷ்மணாவின் வொக்கலிகா சமுதாய வேர்களை நம்பியிருக்கிறது.
இருப்பினும், மைசூருவின் மன்னராக அறியப்படும் யதுவீரருக்கு என ஆழமாக வேரூன்றிய மக்களின் ஆதரவை வாக்குகளாக மாறாமல் தடுக்கும் கடினமான பணியை காங்கிரஸ் எதிர்கொண்டுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு வாடியார் குடும்பம் அரசியலுக்கு வந்திருப்பது காங்கிரஸின் பணியை மேலும் கடினமாக்கியிருக்கிறது.
யதுவீரின் பிரசாரம், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்பதோடு, தொழில்துறை வளர்ச்சியை வலியுறுத்துவதாக அமைந்திருப்பது மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நேரடியாக ஈர்க்கிறது. இதற்கு நேர்மாறாக, லக்ஷ்மணாவோ மைசூரு மற்றும் குடகின் வளர்ச்சிக்கான விரிவான பார்வையை கோடிட்டுக் காட்டுவதோடு, காங்கிரஸ் கட்சி அளித்த உத்தரவாதத் திட்டங்களை மக்கள் முன் கொண்டு வருகிறார்.
குடகு தொகுதியில் வொக்கலிகா சமுதாயம் ஒரு முக்கிய மக்கள்தொகையை கொண்டிருப்பதால், காங்கிரஸ் தனது பாரம்பரிய கோட்டைகளில் வெற்றிக்கொடி பறக்கவிடும் என்று நம்புகிறது. லக்ஷ்மணாவை வேட்பாளராக அறிவித்ததில், சித்தராமையாவின் தனிப்பட்ட கவனம் இருப்பதால், வெற்றி என்பது அவரது கௌரவத்தை வெளிப்படுத்துவதாக அமையும், எனவே, அவரது தலைமையின் மீதான நேரடி வாக்கெடுப்பாகவே இது பார்க்கப்படுகிறது.
பாஜகவின் அரச பரம்பரை வேட்பாளர், ஒரு கட்சியின் தொண்டரை வெல்வாரா? அல்லது பாஜகவின் வொக்காலிகா ஆதரவு வாக்குகளை காங்கிரஸ் சூறையாடுமா? ஜூன் 4ஆம் தேதி தெரியும்.

