இலங்கை அரச பணியில் நிலையான டிஜிட்டல் மாற்றத்தை உருவாக்குதல் மற்றும் பலப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு திறன் கட்டியெழுப்பும் யுக்தி நடைமுறைப்படுத்தப்படுகிறது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பங்குதாரர்களின் ஆதரவுடன், 37 தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களால் (முக்கியமான தகவல் உள்கட்டமைப்பு நிறுவனங்கள்) தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டு முயற்சிகளை ஒருங்கிணைத்து இந்த மூலோபாயத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் (ICTA ) கேட்போர் கூடத்தில், ஜூன் மாதம் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் நடைபெற்ற தேசிய திறன் ஊக்குவிப்பு செயலமர்வில் இது வலியுறுத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் திணைக்களம் (UN DESA), இலங்கை நிலையான அபிவிருத்திக்கான சபை மற்றும் இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து ICTA இச்செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.
நிலையான வளர்ச்சிக்கான நிர்வாகக் கொள்கைகள், டிஜிட்டல் ஆளுகையின் போக்குகள் ஆகியவற்றைப் பற்றிய விரிவான கூடிய பகுதிகளை இந்த செயலமர்வு கொண்டிருந்தது.
இன்றைய வேகமாக மாறிவரும் உலகில், பொருளாதார வளர்ச்சி, சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றிற்கு டிஜிட்டல் தீர்வுகள் முக்கியமானதாகிவிட்டன. இவ்வாறான தீர்வுகளின் அவசியத்தை உணர்ந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வளவாளர்கள், கைத்தொழில் நிபுணர்கள் மற்றும் அரச அதிகாரிகள் இணைந்து இந்தச் செயலமர்வின் ஊடாக தேசத்திற்கான டிஜிட்டல் அதிகாரமளிக்கப்பட்ட எதிர்காலத்தை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்செயலமர்வில் டிஜிட்டல் அரச மாற்றத்தின் எதிர்கால சவால்கள் மற்றும் அவற்றை சமாளிப்பதற்கான யுத்திகள், இலங்கையிலுள்ள அரச அதிகாரிகளின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதை உறுதி செய்யும் டிஜிட்டல் அரச திறன் கட்டமைப்பை திறம்பட பயன்படுத்துவதற்கு தேவையான பின்னணிகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன.
அத்தோடு, பொது நிர்வாகத்தில் நிலையான டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு அணுகுமுறை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களால் அங்கிகரிக்கப்பட்டது.
மேலும், இந்த யுக்தி 2030 டிஜிட்டல் பொருளாதார வியூகத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் எனபதுவும் குறிப்பிடத்தக்கது
இச் செயலமர்வில் செயலாளர் தீபா லியனகே, இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் கிறிஸ்டியன் ஸ்கூக், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் பிரதி பிரதம டிஜிட்டல் பொருளாதார அதிகாரி சமீர ஜயவர்தன மற்றும் ஏனைய வளவாளர்கள் கலந்து கலந்துகொண்டதோடு தமது கருத்துக்களையும் வெளிப்படுத்தினர். UNPOG, DPIDG, UN-DESA இன் பிரதானி கியூ சாங் கோ மற்றும் தென் கொரியா, சிங்கப்பூர் , UNPOG, DPIDG, UN-DESA, UNESCO, ITU போன்ற பிற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆன்லைன் மூலம் இணைந்துகொண்டனர்.
அத்தோடு, இச்செயலமர்வில் டிஜிட்டல் அரச பணி மாற்றத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறக்குறைய 60 மூத்த அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
தேசிய திறன் ஊக்குவிப்பு செயலமர்வு மற்றும் அதன் அடுத்த படிகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, kanishkag@icta.lk என்ற மின்னஞ்சல் மூலம் அல்லது ICTA இன் திறன் மேம்பாட்டு மேலாளர் திருமதி கனிஷ்கா விதானவை தொடர்பு கொள்ளலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

