• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அரசு மருத்துவப் பணியில் இருந்து 2013 முதல் தலைமறைவான ஷாகின்: சகோதரர் டாக்டர் பர்வேஸ் அன்சாரியிடம் விசாரணை | arrested doctor Shaheen absconding from state medical service Brother questioned

GenevaTimes by GenevaTimes
November 12, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
அரசு மருத்துவப் பணியில் இருந்து 2013 முதல் தலைமறைவான ஷாகின்: சகோதரர் டாக்டர் பர்வேஸ் அன்சாரியிடம் விசாரணை | arrested doctor Shaheen absconding from state medical service Brother questioned
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: உ.பி. லக்​னோவைச் சேர்ந்த டாக்​டர் ஷாகின், கான்​பூரில் உள்ள கணேஷ் சங்​கர் வித்​தி​யார்த்தி மருத்​து​வக் கல்​லூரி​யில் (ஜிஎஸ்​விஎம்​சி) 7 ஆண்டு விரிவுரை​யாள​ராகப் பணி​யாற்றி உள்​ளார். கடந்த 2013-ம் ஆண்​டில் அவர் நிர்​வாகத்​துக்கு எந்த தகவலும் கூறாமல் காணா​மல் போய் உள்​ளார். இதையடுத்து 2021-ல் ஷாகின் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

கான்​பூரின் பிரபல ஜிஎஸ்​விஎம்​சி.​யின் தகவல்​களின்​படி, டாக்​டர் ஷாகின் ஜனவரி 1999-ல் பிர​யாக்​ராஜ் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் பட்​டம், டிசம்​பர் 2003-ல் மருந்​தி​யலில் முதுகலைப் பட்​டம் பெற்​றுள்​ளார். பின்​னர் யுபிஎஸ்சி மூலம் அரசு மருத்​து​வ​ராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். ஆகஸ்ட் 2006-ல், அவர் ஜிஎஸ்​விஎம்சி மருந்​தி​யல் துறை​யில் விரிவுரை​யாள​ராக சேர்ந்​தார். 2009-10-ம் ஆண்​டில், ஷாதின் கன்​னோஜ் மருத்​து​வக் கல்​லூரிக்கு மாற்​றப்​பட்​டார்.

எனினும், 6 மாதங்​களுக்​குப் பிறகு மீண்​டும் ஜிஎஸ்​விஎம்சி கல்​லூரிக்கே திரும்​பி​னார். பணி நீக்​கத்​துக்கு பிறகு, கல்​லூரி​யில் அனுபவச் சான்​றிதழ் கோரி சகோ​தரரின் லக்னோ முகவரி​யில் இருந்து ஷாகின் விண்​ணப்​பித்​துள்​ளார். இதற்​கிடை​யில், மகா​ராஷ்டி​ராவைச் சேர்ந்த கண் மருத்​து​வர் டாக்​டர் ஹயாத் ஜாபர் என்​பவரை திரு​மணம் செய்த அவர், 2013-ல் விவாகரத்து செய்​துள்​ளார்.

இதுகுறித்து டாக்​டர் ஜாபர் ஹயாத் கூறும்​போது, ‘‘பெரியோர்​களாகப் பார்த்து செய்து வைத்த எங்​களது திரு​மணம் 2013-ல் முறிந்​தது. அப்​போது முதல் நான் ஷாகினின் தொடர்​பில் இல்​லை. அவர் எனது விருப்​பத்​துக்கு மாறாக, இரு​வரும் ஐரோப்​பிய நாடு​களில் பணி​யாற்​றலாம் என விரும்​பிய​தால் விவாகரத்​தானது. அவர் கைவிட்ட 2 குழந்​தைகளும் என்​னுடன் வளர்​கின்​றனர்’’ என்​றார்.

விவாகரத்​துக்கு பின் பரிதா​பாத்​தில் டாக்​டர் ஷாகின், சில ஆண்​டு​கள் பணி​யாற்றி உள்​ளார். அப்​போது​தான் அவர் ஜெய்ஷ் இ முகமது தீவிர​வாத அமைப்​பிடம் சிக்​கி​யுள்​ளார். அவர் ஜெய்​ஷின் பெண்​கள் பிரி​வான ‘ஜமாத் உல் மோமி​னாத்​’​தின் இந்​திய தலை​வ​ராகி உள்​ளார். இதனால், பரிதா​பாத் பணி​யில் ஷாகினுடன் அப்​போது தொடர்​பில் இருந்​தவர்​களை​யும் டெல்லி புல​னாய்வு அமைப்​பு​கள் விசா​ரித்து வரு​கின்​றன.

உ.பி.யின் சஹாரன்​பூரில் பணிபுரிந்த டாக்​டர் ஆதில் கடந்த நவம்​பர் 6-ம் தேதி ஜம்மு காஷ்மீர் போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்​டார். ஆதில் அளித்த தகவல்​களின்​ அடிப்​படை​யில்​ டாக்​டர்​ ஷாகின்​ கைதாகி இருந்​தார்​.

சஹாரன்​பூரில் டாக்​டர் ஷாகின் சகோ​தரர் டாக்​டர் பர்​வேஸ் அன்​சா​ரி​யும் ஒரு மருத்​து​வ​மனை நடத்தி உள்​ளார். பிறகு லக்​னோ​வின் தனி​யார் பல்​கலைக்​கழகத்​தில் பணி செய்து வந்​துள்​ளார். பர்​வேஸும் தீவிர​வாத மருத்​து​வர்​கள் குழு​வின் உறுப்​பின​ராக இருக்​கலாம் என சந்​தேகிக்​கப்​படு​கிறது. இவரிடம் உ.பி. தீவிர​வாதத் தடுப்பு படை​யினர் தீவிர விசா​ரணை நடத்​துகின்​றனர்.



Read More

Previous Post

Tamilmirror Online || ஹெரோயின் அதிபருக்கு விளக்கமறியல்

Next Post

சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் நிலச்சரிவால் இடிந்து விழுந்தது | Makkal Osai

Next Post
சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் நிலச்சரிவால் இடிந்து விழுந்தது | Makkal Osai

சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் நிலச்சரிவால் இடிந்து விழுந்தது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin