Last Updated:
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 2023 லண்டன் பயணத்தில் அரசுப் பணம் தவறாக பயன்படுத்தியதாக சிஐடி அதிகாரிகள் கைது செய்தனர்.
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி வகித்து வந்தார். இந்நிலையில், இவர் பதவி வகித்து வந்த காலத்தில் அரசு நிதியில் தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் முக்கியதாக 2023 ஆம் ஆண்டு லண்டனுக்கு பயணித்தபோது அரசின் பணத்தை சொந்த செலவுக்காக பயன்படுத்தியதாகவம் புகார் எழுந்தது.
அதன்படி இந்த குற்றச்சாட்டு குறித்து அவர் சிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இதனைத்தொடர்ந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சிஐடி அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் ரணில் விக்கிரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
August 22, 2025 2:25 PM IST
அரசு நிதியில் வெளிநாட்டு பயணம்.. இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அதிரடி கைது!


