Last Updated:
அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்கள் அல்லது பென்ஷனர்களுக்கு பென்ஷனுக்கான நாமினியை அறிவிக்கும் விதியில் புதிய மாற்றம் குறித்து இந்தப் பதிவில் விளக்கமாக தெரிந்து கொள்வோம்.
பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, திருமணத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக விவாகரத்திற்கு வழிவகுக்கும் சூழ்நிலையில், கணவருக்கு பதிலாக தங்களுடைய பிள்ளைகளை நாமினேட் செய்வதற்கு பெண் AIS அதிகாரிகள் மற்றும் பென்ஷனர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்கள் அல்லது பென்ஷனர்களுக்கு பென்ஷனுக்கான நாமினியை அறிவிக்கும் விதியில் புதிய மாற்றம் குறித்து இந்தப் பதிவில் விளக்கமாக தெரிந்து கொள்வோம்.
பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மார்ச் 28, 2025 அன்று பின்வரும் விதியை வெளியிட்டது, “இதன் மூலமாக திருமணத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு பதிவு செய்திருக்கும் பெண்கள் அல்லது வன்முறைக்கு எதிராக பெண்கள் பாதுகாப்பு சட்டம் அல்லது வரதட்சணை தடுப்புச் சட்டம் அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கணவர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கும் பெண் AIS அதிகாரிகள் அல்லது பென்ஷனர்கள் கணவருக்கு பதிலாக தங்களுடைய பிள்ளை / பிள்ளைகள் அல்லது குடும்பத்தாரை நாமினியாக அறிவிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
அரசுப் பணியில் உள்ள ஒரு பெண் ஊழியர் அல்லது பெண் பென்ஷனர் விவாகரத்து சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கைப் பதிவு செய்திருந்தாலோ அல்லது தன்னுடைய கணவருக்கு எதிராக வரதட்சணை தடுப்புச் சட்டம் அல்லது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தாலோ, இந்த மாதிரியான அரசு சேவையில் உள்ள பெண் ஊழியர்கள் அல்லது பெண் பென்ஷனர்கள் தங்களுடைய இறப்புக்குப் பிறகு கணவருக்கு பதிலாக தங்களது குழந்தை / குழந்தைகளை பென்ஷன் பெறுவதற்கான நாமினியாக நியமிக்கலாம் என்று இதன் மூலமாக முடிவு செய்யப்படுகிறது” என்று அந்த விதியின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: Personal loan | பர்சனல் லோனுக்கு உடனடி அப்ரூவல் செய்ய இந்த டிப்ஸ் ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்…! என்ன தெரியுமா…?
அனைத்து இந்திய சேவைகள் விதிகள் 1958இல் உள்ள விதி 22இன் படி, அரசுப் பணியில் உள்ள ஒரு பெண் ஊழியர் அல்லது பென்ஷனர் இறந்துவிடும் பட்சத்தில், உயிருடன் இருக்கும் அவருடைய வாழ்க்கைத் துணைக்கு ஃபேமிலி பென்ஷன் வழங்கப்படும். மேலும், அரசுப் பணியில் இருந்த இறந்து போன ஊழியர் அல்லது பென்ஷனர் ஃபேமிலி பென்ஷன் பெற தகுதி இல்லாமல் போனாலோ அல்லது இறந்த பிறகோ குழந்தைகள் மற்றும் பிற குடும்பத்தாருக்கு ஃபேமிலி பென்ஷனைப் பெறுவதற்கான அனுமதி வழங்கப்படும்.
இதையும் படிக்க: கடன் வழங்கும் வட்டி விகிதங்களை குறைத்த முன்னணி வங்கிகள்… குஷியில் கஸ்டமர்கள்…!
எனினும், மாற்றம் செய்யப்பட்டுள்ள தற்போதைய விதியின் படி, அரசுப் பணியில் உள்ள பெண்கள் அல்லது பெண் பென்ஷனர்கள் கணவருக்கு பதிலாக தங்களுடைய குழந்தைகள் மற்றும் குடும்பத்தாரை நாமினியாக அறிவிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இது பல பெண்களுக்கு பயனுள்ள ஒரு விதி மாற்றமாக அமைகிறது.
April 11, 2025 1:04 PM IST


