ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டம் மனோகர் தானாவில் உள்ள பிப்லோடி அரசுப் பள்ளியில் காலை 8.30 மணியளவில் அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து அங்கு அமர்ந்திருந்த குழந்தைகள் மீது விழுந்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தவிர சுமார் 40 குழந்தைகள் காயமடைந்த நிலையில், 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டட இடிபாடுகளில் சிக்கிய மாணவர்கள், ஆசிரியர்களை மீட்கும் பணியில் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டுள்ள விடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

மீட்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் பேரிடர் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தன. இடிந்து விழுந்தக் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், இது தொடர்பாக முன்னர் பல புகார்கள் எழுந்ததும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உள்ளூர்வாசிகள் புகாரளித்துள்ளனர்.
கட்டட இடிபாடுகளில் சிக்கிய 40-க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
4 Children Dead, 40 Trapped In Debris As Rajasthan School Building Collapses
இதையும் படியுங்கள் | ‘போக்சோ’ வழக்கில் சிக்கிய ஆர்சிபி வீரர்! 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!
VIDEO | Four children killed, 17 injured as government school building collapses in Rajasthan's Jhalawar district, say police. Visuals from the hospital where the injured children have been admitted.#RajasthanNews
(Source: Third Party)
(Full video available on PTI videos -… pic.twitter.com/HZ7L81Z0ix
— Press Trust of India (@PTI_News) July 25, 2025