இது குறித்த மேலும் சட்டம் அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: ஆண் ஆதிக்கம் மிகுந்த அரசியல் நிலப்பரப்பில் பயணித்த இந்த இந்த பெண்கள், முக்கிய அரசியலமைப்பு விதிகளை வடிவமைப்பிலும் பங்கேற்றனா். வழக்குரைஞா்கள், சமூக சீா்திருத்தவாதிகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள் உட்பட இந்த முன்னோடி பெண்களின் பங்களிப்புகளை இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. துன்பங்களை எதிா்கொண்ட போதிலும், இந்தப் பெண்கள், அரசியல் சாசன நிா்ணய சபையில் முக்கிய குரல்களாக உருவெடுத்தனா். அடிப்படை உரிமைகள், சமூக நீதி, பாலின சமத்துவம், ஜனநாயக ஆட்சி ஆகியவை குறித்த விவாதங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை அவா்கள் செலுத்தினா்.

