டெல்லியில் மதுபான கொள்கை மாற்றப்பட்ட வழக்கில் லஞ்சம் கைமாறியதாக கைதான டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை , டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது ஊடகத்தினரை சந்தித்த அர்விந்த் கெஜ்ரிவால் ,தனது கைது அரசியல் சதி என்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக துணை நிலை ஆளுநர் ஆலோசித்து வருவதாக வெளியான தகவல் குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கெஜ்ரிவால் “இது மிகப்பெரிய சதி செயல் ,இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்றார்.
இதனிடையே முதலமைச்சர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்க கோரிய மனு, மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் இருப்பதால் ஆட்சி நிர்வாகம் முடங்கி இருப்பதாக சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சரிடம் ஆறுநாட்கள் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
நீதிமன்றம் அளித்த அவகாசம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் டெல்லியில் உள்ள ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை சார்பில் வாதங்களை முன்வைத்தனர். அதில் டிஜிட்டல் லாக்கர்களின் பாஸ்வேர்டுகளை கெஜ்ரிவால் தர மறுப்பதாக கூறப்பட்டது. விசாரணைக்கு கெஜ்ரிவால் ஒத்துழைக்கவில்லை என்றும் கூறினர்.
பாஸ்வேர்டுகளை ஹேக் செய்து பார்க்க நேரிடும் என்றும் 7 நாட்கள் காவலை நீட்டிக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர். கடந்த இரண்டு வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது, 25,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அமலாக்கத்துறை தயாரித்துள்ளது. என்றும் வாதிடப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அர்விந்த் கெஜ்ரிவால் தம்மை சிக்க வைக்கவே அறிக்கைக்கு மேல் அறிக்கையாக அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…