அரசியல் ஆதாயத்திற்காகப் புனையப்பட்ட பொய் வழக்கு என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கவிதா குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கே.கவிதா அமலாக்கத் துறையினரால் ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கவிதாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து, விசாரணை நீதிமன்றத்தில் கவிதா இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அரசியல் ஆதாயத்திற்காகப் புனையப்பட்ட பொய் வழக்கு என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது தன்னை சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாகவும், இதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடு செய்யப்போவதாகவும் அவர் கூறினார்.
ஏற்கனவே ஏழு நாள்கள் காவலில் இருந்த கவிதாவை, மேலும் 3 நாள்கள் அமலாக்கத்துறையின் காவலில் விசாரிக்க தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.