மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று பிரதமர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவிலிருந்து வெற்றிபெற்ற ஒரே பாஜக எம்.பி.யான சுரேஷ் கோபி சுற்றுலா மற்றும் பெட்ரோலியத்துறைக்கான மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார்.
மலையாள நடிகருமான அவர், சினிமாவில் மீண்டும் நடிக்கப்போவதாக அறிவித்தார். சினிமாவில் நடிக்காமல் தன்னால் வாழ முடியாது என்றும் அமைச்சக பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கேரவன் வாகனத்தில் அதிகாரிகளை அமர்த்தி பணிகளை கவனிக்க ஏற்பாடு செய்யப்போவதாகவும் சுரேஷ் கோபி கூறியிருந்தார்.
இதையும் படிக்க:
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் பரபரப்பு; நேற்று வாக்குவாதம் இன்று கைகலப்பு!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சுற்றுலா, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறைகளில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் வெளியாக இருந்த சுரேஷ் கோபியின் ஒட்டக்கொம்பன் படம் பிரதமர் அலுவலக தலையீடு காரணமாக வெளியாகவில்லை.
இந்நிலையில் அவர் மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அந்த இரண்டு படங்களுக்கும் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அமைச்சர் பதவியை தொடர்வதா வேண்டாமா என்று சுரேஷ் கோபி யோசித்து வருவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
