உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள இழுபறிக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய(mahinda deshapriya) தனது இல்லத்திற்கு முன்பாக பதாகைகளை ஏந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த தேசப்பிரிய, அரசாங்கத்தின் செல்வாக்கு காரணமாக வேட்புமனுத் தாக்கல் செய்து தேர்தலை தாமதப்படுத்துவது எதேச்சாதிகாரத்துக்குச் சமமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
குடிமக்களின் உரிமைகளை மீறும் செயல்
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் இடத்தில் அதிகாரிகள் ஆட்சி செய்வது குடிமக்களின் உரிமைகளை மீறும் செயலாகும் என்று தேசப்பிரிய தனது பதாகைகளில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அம்பலாங்கொடை – படபொல வீதியில் பயணிப்பவர்கள் இந்த பதாகைகளை பார்க்க முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |