டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்ளும் நிலையில், பிளேயிங் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு இருக்கலாம் என்பதை பார்க்கலாம்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில், வங்கதேச அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதையடுத்து, டி20 உலகக் கோப்பை தொடரில் தனது முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா இன்று அயர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
கடந்த சனிக்கிழமை நடந்த பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி விளையாடவில்லை. அதேபோல், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் விளையாடவில்லை. இருப்பினும், இன்றைய போட்டியில் விராட் கோலி வழக்கம்போல் தொடக்க வீரராக களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. மறுபுறம் பயிற்சி ஆட்டத்தில் 19 பந்துகளில் 23 ரன்களை எடுத்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலியுடன் களமிறங்குவார். இது குறித்து கூறியுள்ள முன்னாள் இந்திய அணி வீரர் சித்து, ரிஷப் பநத், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதால், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறியுள்ளார்.
அத்துடன், ஆல்ரவுண்டர் ஷிவம் துபே, அக்சர் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டதால், அவர்களும் இடம்பெறுவார்கள் என்று சித்து கணித்துள்ளார். குறிப்பாக, நியூயார்க் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால், இன்றைய போட்டியில் 5 பந்து வீச்சாளர்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும், அயர்லாந்துக்கு எதிராக சுழற்பந்து வீச்சை பயன்படுத்த நினைத்தால், முகமது சிராஜுக்குப் பதிலாக யுஸ்வேந்திர சாஹலை பயன்படுத்தலாம் என்று சித்து கூறியுள்ளார். அயர்லாந்துக்கு எதிராக குல்தீப் மற்றும் சாஹல் இணைந்து பந்து வீசினால் எதிரணி பலவீனம் அடையும் என்றும் சித்து கூறுகிறார்.
இதனிடையே, இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் கிடைக்காது என கூறப்படுகிறது. அதேபோல், பயிற்சி ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் சொதப்பியதால், அவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. மேலும், வேகப்ப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களான ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா இருவருக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
உத்தேச இந்திய அணி : ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங்
.
&w=750&resize=750,375&ssl=1)
