Last Updated:
பச்சிளம் குழந்தைகளை தனியே படுக்க வைக்கும்படி, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் பிறந்து 26 நாட்களேயான குழந்தையொன்று, பெற்றோருக்கு இடையே தூங்கிக் கொண்டிருந்தபோது பெற்றோரால் நசுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 10-ம் தேதி, சதாம் அபாசி – அஸ்மா தம்பதிக்கு பிறந்த குழந்தைதான் சுஃபியன். கடந்த சனிக்கிழமை (டிச. 6) குழந்தையை தங்களுக்கு இடையில் படுக்கவைத்து பெற்றோர் இருவரும் உறங்கியுள்ளனர். தூக்கத்தில் இருவரும் புரண்டு படுத்தபோது, இடையே இருந்த குழந்தை நசுங்கி உள்ளது. அதில் மூச்சுத்திணறி குழந்தை இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
மறுதினம் காலை தாய்ப்பால் கொடுப்பதற்காக தாய் சல்மா குழந்தையை எழுப்பியபோது, குழந்தை மூர்ச்சையற்ற நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து அருகிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தை குறிப்பிட்டு, பச்சிளம் குழந்தைகளை தனியே படுக்க வைக்கும்படி, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
December 13, 2025 10:16 AM IST


