Last Updated:
அம்பேத்கரின் மரபை பாஜக பாதுகாத்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
காங்கிரசால் புறக்கணிக்கப்பட்ட தேசிய சின்னங்களை பாஜக சிறப்பித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், 65 ஏக்கர் பரப்பளவில் 230 கோடி ரூபாய் செலவில் வாஜ்பாய், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, தீன் தயாள் உபாத்யாயா ஆகியோரின் சிலைகளுடன் தேசிய நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101ஆவது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவுக்கு வருகை புரிந்த பிரதமர் மோடி, இந்த நினைவிடத்தை திறந்து வைத்து, பார்வையிட்டார்
முன்னதாக, வாஜ்பாய், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, தீன் தயாள் உபாத்யாயா ஆகியோரின் 65 அடி உயர சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
#WATCH | Uttar Pradesh: Prime Minister Narendra Modi says, “… After independence, a tendency to connect all the good work that took place in India to the same family emerged. Whether it be books, government schemes, government institutions, streets, roads, or squares, it was… pic.twitter.com/FWiXfBWRWy
— ANI (@ANI) December 25, 2025
மேடையில் பேசிய பிரதமர், சுதந்திரத்திற்குப் பின் அனைத்து நற்பெயர்களும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை சுற்றியே இருந்ததாக, காங்கிரஸை மறைமுகமாக சாடினார்.


