Courtesy: Sihan Farook Farook
தமிழர் இன அழிப்பின் நினைவுச் சின்னமாகக் கருதப்படும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூரும் வகையில் முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அம்பாறையில் ஆரம்பமாகியுள்ளது.
அம்பாறை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில், நேற்று (12.05.2026) திருக்கோவில் – தம்பிலுவில் பொதுச் சந்தை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.
இதன் ஒரு பகுதியாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி முதலில் அருகிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட பின்னர், மே 18 என குறிப்பிடப்பட்ட சிரட்டைகளில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தோருக்கு அஞ்சலி
இந்த நிகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு வடக்கு – கிழக்கின் பல பகுதிகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |




