அம்பானியின் மாஸ்டர் பிளான்..!! சந்தைக்கு வரும் மாயக் கண்ணாடி..!! ஒரு கண்ணாடி இவ்ளோ வேலைகளை செய்யுமா?
தலைநகர் டெல்லியில் இந்திய மொபைல் காங்கிரஸ் 2026 என்ற பெயரில் மாபெரும் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த ஒரு மாயக் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது.
நம்முடைய பெரும்பான்மையான வேலைகளை இந்த கண்ணாடியே பார்த்து கொள்ளும் என்பது தான் இத ஸ்பெஷலே. ஜியோவின் புதிய ஏஐ ஸ்மார்ட் கண்ணாடிகள் (AI Glasses) கண்காட்சியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. புதிய ஏஐ கேமரா கண்ணாடிகளின் மிக முக்கியமான அம்சமாக Scan & Pay வசதி பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் கடைகளில் உள்ள QR கோடை தங்களது கண்ணாடியில் உள்ள கேமரா மூலம் ஸ்கேன் செய்துவிட்டு, வாய்ஸ் கமாண்ட் அதாவது குரல் கட்டளைகள் மூலமாகவே பணப்பரிவர்த்தனையை செய்யலாம்.

இந்த ஸ்மார்ட் கண்ணாடியே கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்யும் அதற்கு இந்த கட்டணட்தை செலுத்து நீங்கள் கட்டளையிட்டல் போதும். போனையே கையில் எடுக்காமல் கண்ணாடி மூலமாகவே பணத்தை செலுத்தலாம். இப்போதைக்கு இது ஒரு சோதனை முயற்சியாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பணம் செலுத்தும் போது பாதுகாப்பு எப்படி உறுதி செய்யப்படும், அதன் வரம்புகள் என்ன என்பது குறித்த முழுமையான தொழில்நுட்ப தகவல்களை ஜியோ இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
ஜியோ நிறுவனம் தனது குரல் வழி ஏஐ சாதனங்களை மூன்று முக்கிய பிரிவுகளாக அறிமுகம் செய்துள்ளது. முதலில் ஜியோபிரேம்கள் (JioFrames), இவை கேமரா பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கண்ணாடிகள். இரண்டாவது ஆடியோ ஃபிரேம்கள் (Audio Frames), இவை Open-ear audio தொழில்நுட்பம் கொண்ட மாடுலர் ஆடியோ கண்ணாடிகள். மூன்றாவது வயர்லெஸ் இயர்பட்கள்.
இந்த அனைத்து சாதனங்களும் ஜியோவின் சொந்த மென்பொருளான JioRealityOS மூலம் இயக்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன்களே இல்லாமல், அன்றாட வேலைகளில் ஏஐ உதவியை பெறும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஜியோவின் இந்த மாயக் கண்ணாடியில் நாம் ஸ்மார்ட்போனை கையில் எடுக்காமலேயே, HD தரத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்யலாம். மேலும் நிகழ்நேர நேரலை ஒளிபரப்பு செய்வதன் மூலம் தாங்கள் பார்ப்பதை சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் பகிரலாம். மொழித் தடைகளை உடைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சாக்போர்டுகள், பில்-போர்டுகள், உணவக மெனுக்கள் அல்லது தயாரிப்புகளை பார்த்த உடனேயே குரல் மற்றும் எழுத்து வடிவில் உடனடியாக மொழிபெயர்த்துக்கொள்ளலாம்.
இந்த சாதனங்கள் இந்திய மொழிகளின் பன்முகத்தன்மையை கருத்தில் கொண்டு, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, குஜராத்தி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் Hello Jio என கூறி ஏஐ அஸிஸ்டெண்ட் ஆக்டிவேட் செய்யலாம். இதன் மூலம் போனை தொடாமலேயே பல வேலைகளை செய்ய முடியும்.
அதுமட்டுமில்லாமல் வாக்கிங் செல்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற தகவல்களை கண்காணிப்பது மற்றும் உடல்நலம் குறித்த ஆலோசனைகளை வழங்குவது போன்ற சேவைகளை தருமாம். பயனர்கள் தங்கள் போனை பார்க்காமலேயே கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் கமெண்ட்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
வரும் டிசம்பர் மாதமே இந்த மாயக் கண்ணாடி சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ப குறைந்த விலையில் இவற்றை வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது. இதன் இறுதி விலை மற்றும் விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
