Last Updated:
“சீன வெளியுறவுத் துறை அமைச்சருடனும் தொலைப்பேசியில் உரையாடி வருகிறோம். பாகிஸ்தானின் முன்னெடுப்பை சீனா ஆதரிக்கிறது” – பாகிஸ்தான் பிரதமர்
அமெரிக்கா தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஈரான் குற்றம்சாட்டிவரும் நிலையில், அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஈரான் – இஸ்ரேல் போரால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றத்தை தணிப்பது குறித்து விவாதிக்க துருக்கி, எகிப்து, சவுதி ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆலோசனை நடத்தினர்.
பாகிஸ்தான்
முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பை சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் பைசல் பின் சந்தித்துப் பேசினார். அப்போது, பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்ய பாகிஸ்தான் துணை நிற்கும் என ஷெபாஸ் ஷெரிப் கூறினார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தர், “போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சாத்தியமான வழிகள் குறித்து ஆலோசித்தோம். ஈரான் மீதான மோதலை முடிவுக்கு கொண்டுவர அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருகிறோம். இதுதொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சருடனும் தொலைபேசியில் உரையாடி வருகிறோம். பாகிஸ்தானின் முன்னெடுப்பை சீனா ஆதரிக்கிறது” என கூறினார்.


