ஒரே நேரத்தில் ராஜினாமா செய்த இரு அமைச்சர்கள்
கடந்த வாரம் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மனோ தங்கராஜ் மீண்டும் பால்வளத்துறை அமைச்சரானார்.

