புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில், சமூக ஊடகங்களில் பொய்யான மற்றும் புனையப்பட்ட தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்கத் தகவல் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அமைச்சரின் ஊடகச் செயலாளர் குணரத்ன விக்கிரமதிலக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட சமூக ஊடகச் செயற்பாட்டாளர் ஒருவரால் இந்தப் போலித் தகவல்கள் உருவாக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
தற்போதைய அமைச்சர் புத்தசாசனத்தையோ அல்லது அதன் சொத்துக்களையோ அவமதிக்கும் வகையில், ஆதாரமற்ற பல போலித் தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இந்தத் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்பதைப் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்வதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், இவ்வாறான போலித் தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பும் நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

