சில நேரங்களில் அமேசானில் ஆர்டர் செய்யும் பொருட்கள் மாறி வருவதை பார்த்திருப்போம். ஆனால், பெங்களூருவில் பார்சலில் பாம்பு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சர்ஜாபூரை சேர்ந்த தம்பதியினர் ஐ.டி. துறையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் வீடியோ கேம் விளையாடுவதற்காக அமேசானில் XBOX CONTROLLER என்ற வீடியோ கேம் கருவியை ஆர்டர் செய்துள்ளனர். இதையடுத்து பார்சல் தயாராகி டெலிவரிக்காக காத்திருந்தது.
இந்நிலையில், அவர்கள் வீட்டுக்கு அந்த அமேசான் பார்சல் வந்தது. அப்போது அந்த வீடியோ கேம் கருவியை தம்பதியினர் ஆவலோடு பிரித்து பார்த்தனர். அப்போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலுக்கு பாம்பு ஒன்று சீறியது. இதனால் பயந்துபோன அவர்கள் பார்சலை வீசிவிட்டு அங்கிருந்து அலறி ஓடினர்.
இதையும் படிங்க : சர்வதேச அழகிப் போட்டியில் இந்தியாவின் ஜரா சதாவரி… யார் இவர் தெரியுமா?
இதையடுத்து, இதனை வீடியோ எடுத்து அமேசான் நிறுவனத்திடம் முறையிட்டுள்ளனர். மேலும் பார்சலை ஒட்டும் ஸ்டிக்கர் நடுவே பாம்பு சிக்கியதால், அதனால் தப்பிக்க முடியவில்லை. அதே சமயம், பாம்பின் உயிருக்கும் ஆபத்து நேரவில்லை. இந்நிலையில் பாம்பால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அமேசான் நிறுவனம் XBOX CONTROLLER-க்கான முழுத் தொகையையும் திருப்பிக் கொடுத்துள்ளது. ஆனால், தங்கள் உயிருக்கு ஆபத்து நேர்ந்திருந்தால் என்ன செய்வது என்று நுகர்வோர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
