• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்க வரி விதிப்பு தாக்கம்: கடல் உணவு ஏற்றுமதி 50% குறைந்தது! | America Tax Tariff Effect: Tamil Nadu Seafood Exports Reduce 50 Percentage

GenevaTimes by GenevaTimes
August 29, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
அமெரிக்க வரி விதிப்பு தாக்கம்: கடல் உணவு ஏற்றுமதி 50% குறைந்தது! | America Tax Tariff Effect: Tamil Nadu Seafood Exports Reduce 50 Percentage
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் கடல் உணவு ஏற்றுமதி 50 சதவீதம் குறைந்துள்ளது. தமிழக கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்தியாவின் ஏற்றுமதியில் கடல் உணவு முக்கிய இடத்தில் உள்ளது. கடந்த 2023-2024-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரூ.60,523 கோடி மதிப்பில், 17 லட்சத்து 81 ஆயிரத்து 602 டன் அளவுக்கு பதப்படுத்தப்பட்ட இறால், மீன், கணவாய், நண்டு உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டன. இதில், அமெரிக்காவுக்கு மட்டும் ரூ.20,892 கோடி மதிப்பிலான 3 லட்சத்து 29 ஆயிரத்து 192 டன் கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக மட்டும் கடந்த 2023-3024-ம் ஆண்டு ரூ.3,214 கோடி மதிப்பிலான 73 ஆயிரத்து 822 டன் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கு இறால்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆண்டு கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதி குறைந்துள்ளது. அதனை ஈடுகட்டும் வகையில் அமெரிக்காவுக்கு பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனால், கடல் உணவு ஏற்றுமதிக்கு அமெரிக்கா நல்ல சந்தையாக விளங்கி வருகிறது.

அமெரிக்காவுக்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் சுமார் 25 நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 15 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தூத்துக்குடியில் இருந்து பதப்படுத்தப்பட்ட இறால், கணவாய், மீன், நண்டு உள்ளிட்ட மாதம் 20 கண்டெய்னர்களில் கடல் உணவு பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளதால் கடல் உணவு ஏற்றுமதி கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவு பொருட்களில் 30 முதல் 40 சதவீதம் வரை தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப் படுகின்றன. அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், ஏற்றுமதி சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. கடல் உணவுகளை நீண்ட நாட்கள் இருப்பு வைக்க முடியாது. மத்திய அரசு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Read More

Previous Post

நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கும் காங். எம்எல்ஏக்கள்!

Next Post

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி உயர்வுக்கு உள்நாட்டு தேவை அதிகரிப்பு காரணமல்ல: அமெரிக்கா | India’s oil import surge not due to rising domestic demand: US

Next Post
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி உயர்வுக்கு உள்நாட்டு தேவை அதிகரிப்பு காரணமல்ல: அமெரிக்கா | India’s oil import surge not due to rising domestic demand: US

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி உயர்வுக்கு உள்நாட்டு தேவை அதிகரிப்பு காரணமல்ல: அமெரிக்கா | India's oil import surge not due to rising domestic demand: US

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin