1,600°C வரையிலான வெப்பம் ஏற்பட்டாலும் , இந்த எரிபொருள் துகள் உருகாது. இதனால் பழைய அணு உலைகளில் ஏற்படுவது போன்ற கதிர்வீச்சு கசிவு அபாயம் இதில் இல்லை. இந்த எரிபொருள் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மின்சாரம் வழங்கக்கூடியது, எனவே அடிக்கடி எரிபொருள் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் அணு கழிவு அச்சமும் இல்லை. இவ்வளவு பாதுகாப்பாக இருப்பதால் தான், இதனை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகே கொண்டுசென்று பயன்படுத்த முடிகிறது.


