• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா: பாக். ராணுவ தளபதிக்கு அழைப்பா? – வெள்ளை மாளிகை விளக்கம் | US Army 250th Anniversary Pak Army Chief Invite White House Explains

GenevaTimes by GenevaTimes
June 15, 2025
in உலகம்
Reading Time: 6 mins read
0
அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா: பாக். ராணுவ தளபதிக்கு அழைப்பா? – வெள்ளை மாளிகை விளக்கம் | US Army 250th Anniversary Pak Army Chief Invite White House Explains
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்க பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அது தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் இது அரசியில் ரீதியாக பேசு பொருளானது. “இது ராஜாங்க ரீதியாக இந்தியாவுக்கு பின்னடைவு,” என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் விமர்சித்திருந்தார்.

“அமெரிக்க ராணுவ தினத்தை முன்னிட்டு வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ராஜாங்க ரீதியாக இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பாக வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் அவரது பேச்சு இருந்தது. இதில் அமெரிக்காவின் நோக்கம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது?” என அந்த ட்வீட்டில் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.

“தவறான தகவல்களை பரப்புகிறார், தேசத்தின் வெளியுறவு கொள்கை சார்ந்து அவதூறு கருத்துகளை ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.” என பாஜக ஐடி பிரிவின் அமித் மாள்வியா மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகை தரப்பில் அதிகாரபூர்வ விளக்கம் தரப்பட்டுள்ளது. “இது தவறான தகவல். எந்த வெளிநாட்டு ராணுவத் தலைவர்களும் அமெரிக்க ராணுவ விழாவுக்கு அழைக்கப்படவில்லை.” என வெள்ளை மாளிகை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

அமெரிக்க ராணுவ அணிவகுப்பு: பெரும்பாலான உலக நாடுகளில் ராணுவ அணிவகுப்பு என்பது ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், அமெரிக்காவில் இந்த வழக்கம் இல்லை. கடைசியாக கடந்த 1991-ம் ஆண்டு வளைகுடா போர் வெற்றிக்கு பிறகு அங்கு ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிலையில், 250-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அங்கு ராணுவ அணிவகுப்பு இன்று நடைபெற்றது. இதில் அமெரிக்க ராணுவத்தின் அனைத்துவித படைகளும் அணிவகுத்தன. இதில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்றார்.



Read More

Previous Post

300 ரூபாய்க்கு எகிறிய ப்ரோக்கோலி விலை… மகிழ்ச்சியில் நீலகிரி விவசாயிகள்…

Next Post

ஈரான் மீதான வான் தாக்குதல்கள் – தீவிரப்படுத்திய இஸ்ரேல்

Next Post
ஈரான் மீதான வான் தாக்குதல்கள் – தீவிரப்படுத்திய இஸ்ரேல்

ஈரான் மீதான வான் தாக்குதல்கள் - தீவிரப்படுத்திய இஸ்ரேல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin