முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு (83) பரவி வரும் புரோஸ்டேட் புற்றுநோய் மேலும் தீவிரமடைந்து, அவரது எலும்புகள் மற்றும் உடலின் பிற பாகங்களுக்கும் பரவியுள்ளதாக அவரது மகன் ஹண்டர் பைடன் தெரிவித்துள்ளார்.
2025 மே மாதம் ஜோ பைடனுக்கு கடுமையான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
தற்போது இந்நோய் எலும்புகளுக்குப் பரவியுள்ளதால், அவர் கடுமையான வலியினாலும் உடல்நலக் குறைவாலும் அவதிப்பட்டு வருவதாக ஹண்டர் பைடன் கூறியுள்ளார்.
கடுமையான வலியால் அவதி
பைடனின் புற்றுநோய் திசு பரிசோதனையில் கிளீசன் ஸ்கோர் 9 எனப் பதிவாகியுள்ளது. இது புற்றுநோயின் மிகத் தீவிரமான நிலையைக் (Grade Group 5) குறிக்கிறது.

கதிர்வீச்சு மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், புற்றுநோய் செல்கள் எலும்புகளுக்கு அப்பாலும் பரவி, அவரது உடலை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து அவரது மகன் ஹண்டர் பைடன் கூறுகையில், “என் தந்தை கடுமையான வலியால் அவதிப்படுவதைப் பார்ப்பது மிகவும் வேதனையாக உள்ளது. இருப்பினும், அவர் தனது மன உறுதியுடன் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

