அமெரிக்க போட்ட குண்டு.. ஈரான் உயர் அதிகாரிகளை கொல்ல திட்டம் போடும் இஸ்ரேல்.. வெளியான ஷாக் தகவல்!
அமெரிக்கா – ஈரான் மத்தியிலான அமைதி ஒப்பந்தம் எட்டப்படுவதை விரும்பாத இஸ்ரேல், இந்த பேச்சுவார்த்தையில் ஈடுப்படும் ஈரான் தலைவர்களை கொல்ல இஸ்ரேல் திட்டமிடுவதாக அமெரிக்க உயர் அதிகாரி வெளியிட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோரை கொல்ல திட்டமிடுவதாகவும், இதற்கு அமெரிக்கா அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்க அரசு ஈரானிடம், இஸ்ரேலின் சதி திட்டத்தை குறித்து அறிவுறுத்தியுள்ளது என வாஷிங்டன் போஸ்ட் தனது செய்தியில் குறிப்பிட்டு உள்ளது.

இதுக்குறித்து அமெரிக்காவில் இருக்கும் இஸ்ரேல் தூதரகம் பதில் அளிக்க மறுத்தவிட்ட நிலையில், வெள்ளை மாளிகை அதிபர் டிரம்ப் அமைதியை நிலை நாட்ட விரும்புகிறார் என தெரிவித்துள்ளது. ஈரான் உயர் அதிகாரிகளை இஸ்ரேல் கொல்ல திட்டமிடுவதாக இதற்கு முன்பு நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அமெரிக்கா – ஈரான் மத்தியில் அணுஆயுதம் தயாரிப்பு திட்டம், போர் நிறுத்தம், ஹார்முஸ் கட்டுப்பாடு போன்ற பல முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படுகிறது. அமெரிக்கா போர் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது முதல் தொடர்ந்து இப்பேச்சுவார்த்தையை சீர்குலைக்க லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இது இரு நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தை முயற்சியில் பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுப்படும் உயர் அதிகாரிகளை இஸ்ரேல் கொன்றுவிட்டால், அமெரிக்கா உடனான தொடர்பும், பேச்சுவார்த்தையும் தடைப்படும் என்பசு இஸ்ரேலின் நோக்கமாக உள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி துவங்கிய ஈரான் உடனான போரில் இஸ்ரேல்- அமெரிக்க படைகள் இணைந்து பல மூத்த ஈரான் தலைவர்களை கொன்றனர்.
இதில் முக்கியமாக ஈரான் நாட்டின் உயரிய தலைவரான அயத்துல்லா அலி கமெனி-யை கொன்றது இஸ்ரேல் படைகள். இதை தொடர்ந்து மார்ச் மாதத்தில் ஈரான் நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரியான அலி லாரிஜானியை கொன்றது. இதன் பின்பு தான் போர் இரு பக்கமும் தீவிரமடைந்து தற்போது போர் நிறுத்த பேச்சுவார்த்தை அளவுக்கு வந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு மிகவும் நெருங்கி பணியாற்றி வருவது அப்பாஸ் அராக்சி மற்றும் முகமது பாகர் காலிபாஃப் தான். ஜூன் மாதம் எட்டப்பட்ட அமைதி பேச்சுவார்த்தை ஒப்பந்தம் இஸ்ரேலின் கனவான ஈரான் ஆட்சி மாற்றத்திற்கு பெரும் தடையாக இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான டிரம்ப் நட்பு முறிந்தது.
இந்த நிலையில் தான் இஸ்ரேல், அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுப்படும் உயர் அதிகாரிகளை கொல்ல திட்டமிடுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

